காதலருக்கு பிறந்தநாள்.. லாக்டவுனில் பிரைவேட் பார்ட்டி.. பிரபல சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி கைது

சென்னை: உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களையும் டிக்டாக் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்த கவர்ச்சி கன்னி பியூமி ஹன்சமாலி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் லாக்டவுன் விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தனது புதிய காதலர் பிறந்தநாளை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கொண்டாடி உள்ளார்.

விவரம் அறிந்த போலீசார் நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் அவரது காதலர் சண்டிமால் ஆகியோரை கைது செய்தனர்.

கவர்ச்சியின் உச்சம்

கவர்ச்சியின் உச்சம்

பிரபல சிங்கள நடிகையான பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இலங்கையில் மட்டுமின்றி பியூமிக்கு இந்தியாவிலும் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ்ப்படம்

தமிழ்ப்படம்

சிங்கள நடிகையான பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்கள் வாயிலாக தென்னிந்தியாவில் பிரபலமான நிலையில், மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகி வரும் லக் நவ் படத்தில் நடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

வீக்கெண்ட் ஆனால் பார்ட்டி, மத்த நேரம் எல்லாம் டிக்டாக்.. பியூமி ஹன்சமாலியின் அலப்பறை - வீடியோ
ஆபாச வீடியோக்கள்

ஆபாச வீடியோக்கள்

மேலும், பல ஆபாச வீடியோக்களையும் இவர் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். கடந்த ஆண்டு சிங்கள நடிகர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் இவரது முன்னழகை தபளா போல அவர் தட்டி வாசிக்கும் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

கணவர் கூட இல்லை

கணவர் கூட இல்லை

15 வயதிலேயே மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்த பியூமி ஹன்சமாலி 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், பல நடிகர்களுடன் இவருக்கு தொடர்பு இருந்து வந்த நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு கவின் எனும் மகன் ஒருவர் உள்ளார்.

பிரைவேட் பார்ட்டி

பிரைவேட் பார்ட்டி

சமீபத்தில் சண்டிமால் ஜெயசிங்கே என்பவரை தனது புதிய காதலர் என அறிமுகப்படுத்தி இருந்தார் பியூமி ஹன்சமாலி. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று இரவு அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரைவேட் பார்ட்டி ஒன்றை நடத்தினார். ஏகப்பட்ட திரை பிரபலங்களும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பியூமி கைது

பியூமி கைது

லாக்டவுன் நேரத்தில் அதன் விதிகளை மீறி பிறந்தநாள் விழா கொண்டாடிய குற்றத்திற்காக நடிகை பியூமி ஹன்சமாலியையும் சண்டிமாலையும் போலீசார் அதிரடியாக திங்களன்று கைது செய்தனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய புள்ளிகளுக்கும் போலீசார் வலை விரித்துள்ளனர்.

ஒரு மில்லியனுக்கு ஜாமின்

ஒரு மில்லியனுக்கு ஜாமின்

கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை பியூமி ஹன்சமாலி ஒரு மில்லியன் ஜாமினில் வெளி வந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X