கையில் பேட் உடன் பியூமி ஹன்சமாலி.. ஐபிஎல் போட்டிக்கு இவரும் இப்படி விளம்பரம் பண்றாரே!
சென்னை: கவர்ச்சி காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டு வைக்கும் நடிகை பியூமி ஹன்சமாலி வெளியிட்டுள்ள ஐபிஎல் விளம்பரம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
Recommended Video
கிரிக்கெட் பிடிக்காத, ஐபிஎல் பார்க்காத பிரபலங்கள் இருப்பார்களா? என்ன என்பது போல, இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியும் ஐபிஎல் போட்டிக்கு விளம்பரம் செய்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட் அலப்பறைகள்
லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், விளம்பர ஷூட்டிங்கில் பிசியாகி வருகிறார் நடிகை பியூமி ஹன்சமாலி. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றுக்கு சென்ற அவர், அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வேற லெவலில் வைரலாக்கினார்.

குட்டி டிரெஸ்
வெறும் பனியன் மற்றும் குட்டி உள்ளாடை அணிந்து கொண்டு பின்னழகு தெரியும்படி அவர் காட்டிய போஸை பார்த்த ரசிகர்கள், என்னம்மா இப்படி நிக்கிறீங்க என கிண்டல் அடித்து கமெண்ட் செய்தனர். மேலும், அதே உடையில் தனது மகன் கவினுடனும் வீட்டுக்கு வெளியே கெட்ட ஆட்டம் போட்டார் நடிகை பியூமி.

கையில் கால்பந்துடன்
லேஸ் வைத்த ஷூ போல பிங்க் நிற லேஸ் வைத்த டாப்ஸ் அணிந்து கொண்டு செம கிளாமராக போஸ் கொடுத்த நடிகை பியூமி ஹன்சமாலி, கால்பந்து ஒன்றை கையில் வைத்துக் கொண்டு சமீபத்தில் விளம்பர படம் ஒன்றில் நடித்து இருந்தார். அதன் புகைப்படத்தையும் ட்விட்டரில் ஷேர் செய்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

எல்லாம் தெரிய
டிக்டாக் வீடியோக்கள் மற்றும் காரில் செல்லும் போது எடுத்துக் கொள்ளும் கவர்ச்சி வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வரும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறார் இந்த அக்கறை சீமை அழகி. எல்லா அழகும் தெரியும் படி இவர் வெளியிடும் வீடியோக்களை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

ஐபிஎல் விளம்பரம்
இந்நிலையில், தற்போது கையில் பேட் உடன் ஐபிஎல் விளம்பரம் ஒன்றுக்கு நடிகை பியூமி ஹன்சமாலி கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. இவருக்கும் ஐபிஎல் போட்டிக்கும் அப்படி என்ன சம்பந்தம் என்று பார்த்தால், எல்லா நாடுகளிலும் ஐபிஎல் போட்டித் தொடர்பாக ஏகப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் உருவாக்கப்பட்டு காசு பார்க்கின்றனர். இவரும் அப்படியொரு ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்துக்காகத் தான் இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











