மறக்க முடியவில்லை.. இலங்கை அழகிக்காக உருகும் இளைஞர்.. லிப்லாக் போட்டோக்களை வெளியிட்டு உருக்கம்!
சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலியுடன் நெருக்கமாக இருக்கும் பல போட்டோக்களை வெளியிட்டு இளைஞர் ஒருவர் உருகியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல இலங்கை நடிகையாகவும் மாடலாகவும் இருந்து வருபவர் பியூமி ஹன்சமாலி. பல அழகி பட்டங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார்.
கணவரை பிரிந்து வாழும் பியூமிக்கு கவின் என்ற மகன் உள்ளார். எப்போதும் நண்பர்களுடன் பார்ட்டி, குடி கும்மாளம் என இருந்து வருகிறார் பியூமி ஹன்சமாலி.

என்ன ஆனது?
அண்மையில் தனது முன்னாள் கணவருடன் இருக்கும் லிப்லாக் போட்டோவை டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த பியூமி ஹன்சமாலி, மிஸ் யூ மை எக்ஸ் ஹஸ்பெண்ட் என டிவிட்டியிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் கணவருக்கு என்ன ஆனது? விவாகரத்தாகிவிட்டதா? பிரிந்து சென்று விட்டாரா என பல கேள்விகள் எழுப்பினர்.

இப்படி இருந்தால் எப்படி?
ஆனால் அவை எதுவுக்கும் பியூமி ஹன்சமாலி பதில் சொல்லவில்லை. அதே நேரத்தில் தனது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அதனை பார்த்த ரசிகர்கள் இப்படி இருந்தால் எப்படி கணவர் உடன் இருப்பார் என விளாசினர்.

ஆண் நண்பர்கள்
இருந்த போதும் அதற்கெல்லாம் அடங்காத பியூமி ஹன்சமாலி, தொடர்ந்து தனது ஆண் நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வந்தார். இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வேனுரா ஹெஷன் என்பவர் ஷேர் செய்துள்ளார்.

கட்டியணைத்தப்படி..
ஒன்று இரண்டு என்றல்ல.. ஏராளமான போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார் அவர். வீட்டில் ஒன்றாக இருந்த போட்டோக்கள், பாரில், ஹோட்டலில் வீட்டு கிட்சனில் என இருவரும் கட்டியணைத்தப்படியும் நெருக்கமாகவும் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார்.

மறக்க முடியவில்லை
காரில் செல்லும் போது இருவரும் சேர்ந்து எடுத்த செல்பிக்கள், பிறந்த நாளில் பியூமி கேக் ஊட்டி விடும் போட்டோக்கள், முத்தம் கொடுக்கும் போட்டோக்கள் என பல போட்டோக்களை தனது சமூக வலைதளபக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் உன்னுடன் இருந்த தருணங்களை என்னால் மறக்க முடியவில்லை என்றும் உன் முகத்தை மறக்க முடியவில்லை என்றும் உருகியுள்ளார்.
Recommended Video

காரணமே இல்லையா?
அவருடைய போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் விவாகரத்தாகிவிட்டதா என கேட்டுள்ளனர். மேலும் சிலர் காரணமே இல்லாமல் பியூமி உங்களை பிரிந்துவிட்டாரா என்றும் என்ன காரணத்திற்காக நீங்கள் பிரிந்தீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











