வெளியானது பீட்சா 3 படத்தின் மிரட்டலான டீசர்... உறைய வைக்கும் காட்சிகள்

சென்னை : விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த படம் பீட்சா.

இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து பீட்சா 2 படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது பீட்சா 3 படம் உருவாகி வருகிறது. இதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பீட்சா படம்

பீட்சா படம்

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2012ல் வெளியான படம் பீட்சா. கார்த்திக் சுப்புராஜ் இயக்க்ததில் வெளியான முதல் படம் இது. அவருக்கு மிகச்சிறந்த பாராட்டுக்களை இந்தப் படம் பெற்றுத் தந்தது. மேலும் தமிழ் சினிமாவின் ட்ரெண்டை மாற்றிய பெருமையும் இந்தப் படத்திற்கு இருந்தது.

பீட்சா 2 படம்

பீட்சா 2 படம்

இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து பீட்சா 2 படமும் ரிலீசானது. வில்லா என்ற பெயரில் வெளியான இந்தப் படத்தை தீபன் சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். படத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்தனர். முதல் படம் அளவிற்கு கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் இந்தப் படமும் ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்தது.

பீட்சா 3 படம்

பீட்சா 3 படம்

இந்நிலையில் தற்போது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பீட்சா 3 படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். அஸ்வின், குருவ் நாராயணன், காளி வெங்கட் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் போஸ்டரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்த அவர், புதுமுக இயக்குநர் மோகன் போவிந்த் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். படத்தில் நடித்துள்ள குருவ் நாராயணன், படத்தில் மிகவும் வலுவான ஸ்கிரிப்ட் அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

டீசர் வெளியீடு

இந்நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் அஸ்வினுக்கு நடிப்பதற்கு அதிகளவிலான ஸ்கோப் உள்ளது. அதை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளது டீசரில் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான திரைக்கதை வெளிப்படுகிறது.

சிறப்பான பீட்சா படம்

சிறப்பான பீட்சா படம்

பீட்சா படம் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் சிறப்பான சினிமா கேரியரை திறந்து விட்டது. அந்தப் படத்தையடுத்து இருவரும் அடுத்த கட்டத்திற்கு தங்களது கேரியரை செம்மையாக்கிக் கொண்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ரஜினி மற்றும் தனுஷ் என லீட் ஹீரோக்களை இயக்கி வருகிறார்.

சிறப்பான விஜய் சேதுபதி

சிறப்பான விஜய் சேதுபதி

இதேபோல விஜய் சேதுபதியும் மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் தேர்ந்தெடுத்து கதாபாத்திரங்களை செய்து வருகிறார். அந்த கேரக்டர்களுக்கு தன்னுடைய நடிப்பின் மூலம் நியாயம் செய்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X