பீட்சா 3 தயார் டீசர் எப்போது தெரியுமா .. படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகிறது.

பீட்சா பாகம்-2 அசோக் செல்வன் நடிப்பில் வெளியாக இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்பொழுது பீட்சா மூன்றாவது பாகம் உருவாகி இருக்க அதன் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹாரர் காமெடி ஜானரில்

ஹாரர் காமெடி ஜானரில்

கடந்த 2012 ஆம் ஆண்டு ஹாரர் காமெடி ஜானரில் வெளியான பீட்சா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறும் படங்கள் மூலம் வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். ரம்யா நம்பீசன் ஆடுகளம் நரேன் கருணாகரன் பாபி சிம்ஹா என பலர் இதில் நடித்திருந்தனர் . கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதி பாபி சிம்ஹா என இப்படத்தில் நடித்த அனைவருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அசோக் செல்வன் ஹீரோவாக

அசோக் செல்வன் ஹீரோவாக

ஹாரர் மற்றும் டார்க் காமெடி ஜானரில் மிகச் சிறந்த திரில்லர் படமாக உருவான பீட்சா மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. பீட்சா ஒன்றின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வருடமே பீட்சா பாகம் 2 வெளியானது. பீட்சா 2ல் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து இருக்க சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டடித்தது.

பீட்சா 3 தி மம்மி

பீட்சா 3 தி மம்மி

இந்த நிலையில் பீட்சா பாகம்-3 இப்போது உருவாகி உள்ளது. தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் தயாரிப்பாளர் சிவி குமார் இப்படத்தையும் தயாரித்து உள்ளார். நடிகர் அஸ்வின் ஹீரோவாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். பீட்சா 3 தி மம்மி என்ற பெயரில் இப்படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.

விஜயதசமிக்கு பீட்சா 3 டீசர் வெளியாகும்

விஜயதசமிக்கு பீட்சா 3 டீசர் வெளியாகும்

மேலும் காளி வெங்கட், கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க படக்குழு டீசர் குறித்த புதிய அப்டேட்டை இப்போது வெளியிட்டுள்ளது. பீட்சா ஒன்று மற்றும் இரண்டை தொடர்ந்து பாகம் 3 எப்போது வெளியாகும் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு நற்செய்தி அளிக்கும் வகையில் வரும் விஜயதசமிக்கு பீட்சா 3 டீசர் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X