Pizza 3 :பீட்சா 3 தி மம்மி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அடுத்த மாதம் காத்திருக்கும் கொண்டாட்டம்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ட்ரெண்டை ஏற்படுத்தியிருந்தது பீட்சா படம்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே, அசோக் செல்வன் லீட் கேரக்டரில் நடித்து பீட்சா -தி வில்லா படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது அஸ்வின், நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் பீட்சா 3 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போகும் நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பீட்சா 3 தி மம்மி படத்தின் ரிலீஸ் தேதி : நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து குறைவான பொருட்செலவில் உருவாகி அதிகமான வசூலையும் சிறப்பான விமர்சனங்களை பெற்ற படம் பீட்சா. இந்தப் படம் ஒரு ட்ரெண்ட் செட்டராகவே அமைந்தது. படம் பேய் படம் போலவே கடைசி வரைக்கும் எடுத்து செல்லப்பட்டு இறுதியில் ட்விஸ்ட் வைக்கப்பட்டிருக்கும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தப் படம் மிகச்சிறப்பாக அமைந்தது. படம் கடந்த 2012ம் ஆண்டில் வெளியானது.
இதையடுத்து அடுத்த ஆண்டிலேயே அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து பீட்சா -தி வில்லா என்ற படம் வெளியானது. இந்தப் படம் முதல் படத்தை போல இல்லாமல் பேய் படமாகவே வெளியானது. ஆனால் முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இந்தப் படத்திற்கு அந்த அளவிற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து பீட்சா 3 படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படம் முன்னதாகவே சூட்டிங் நிறைவடைந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போனது. சிவி குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இநத்ப் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் வரும் மே மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை வி ஸ்கொயர் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
நடிகர் அஸ்வின், நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ள நிலையில், முந்தைய படங்களில் இருந்து இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ஹீரோ அஸ்வின் நடிப்பில் வரும் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் இவருக்கு முக்கியமான கேரக்டர் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து சில தினங்களிலேயே பீட்சா 3 தி மம்மி படமும் வெளியாகவுள்ளது. இதனால் அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இது அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களையும் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











