ஹிட் அடித்த 'பீட்ஸா': இரண்டு வாரத்தில் 1.85 கோடி வசூல்!

By Mayura Akilan

சமீபத்தில் வெளியான திகில் திரைப்படம் பீட்ஸா வெளியான இரண்டு வாரத்தில் 1.85 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சாதாரணமாக ரிலீஸ் ஆகி சாதனை படைத்துள்ள பீட்ஸா பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்.

பீட்ஸா சாப்பிடலாம்பா...

பீட்ஸா சாப்பிடலாம்பா...

அக்டோபர் மாதம் 19ம் தேதி பீட்ஸா ரிலீஸ் ஆனது. சாதாரணமாக போய் பார்த்த ரசிகர்கள் நல்லா இருக்குப்பா. காசு கொடுத்து சாப்பிடலாம் என்று சொல்லி சொல்லியே ஓட வைத்து விட்டனர்.

இரண்டு வாரத்தில் 1.85 கோடி

இரண்டு வாரத்தில் 1.85 கோடி

அக்டோபர் மாதத்தில் மட்டும் 13 படங்கள் ரிலீஸ் ஆனது. அதில் இரண்டு வாரத்தில் மட்டும் பீட்ஸாவின் வசூல் 1.85 கோடி ரூபாய்.

விஜய் சேதுபதிக்கு விசிட்டிங் கார்டு...

விஜய் சேதுபதிக்கு விசிட்டிங் கார்டு...

படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி ஏற்கனவே தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் ஹீரோவாகவும், சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும் பீட்ஸா சூப்பர் விசிட்டிங் கார்டாக அமைந்திருக்கிறது.

முதல் படமா நம்ப முடியலையே?

முதல் படமா நம்ப முடியலையே?

சின்னத்திரையில் நாளைய இயக்குநர் பட்டம் வென்ற கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படம்தான் பீட்ஸா. ஆனால் இது இவரது முதல் படம் என்பதை யாரும் நம்ப மறுக்கின்றனர்.

லிவ் இன் டுகெதர்

லிவ் இன் டுகெதர்

காதல் ஜோடி, திருமண தம்பதி பற்றி மட்டுமே பேசிய தமிழ் சினிமாவில் இன்றைய காலத்திற்கு ஏற்ற லிவ் இன் வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

எல்லாமே சூப்பர்தான்....

எல்லாமே சூப்பர்தான்....

படத்தின் கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு என எல்லாமே சூப்பர் என்பது ரசிகர்களின் கருத்தாக இருப்பதால் பெரும்பாலோனோர் பீட்ஸாவை பார்க்க ஆவலாக இருக்கின்றனர்.

மல்ட்டி பிளெக்ஸ் வரவேற்பு

மல்ட்டி பிளெக்ஸ் வரவேற்பு

புதுமுக இயக்குநர் படம், அறிமுகமில்லாத ஹீரோ என்றாலே மல்ட்டி ப்ளெக்ஸ் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவது சிரமம்தான். பீட்ஸாவுக்கு நல்ல பேச்சு கிடைத்திருப்பதால் இப்போது மல்ட்டி ப்ளெக்ஸ் தியேட்டர்கள் பீட்ஸாவுக்கு ஆர்வம் காட்டு கின்றன.

மாற்றானை கலங்க வைத்த பீட்ஸா

மாற்றானை கலங்க வைத்த பீட்ஸா

அக்டோபரில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வெளியான படம் மாற்றான். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை ஏமாற்றிவிட்டது. அவர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்துள்ளதாம் பீட்ஸா.

தெலுங்கில் ரீமேக் ஆகிறது..

தெலுங்கில் ரீமேக் ஆகிறது..

பீட்ஸா ஓடும் ஓட்டத்தைப் பார்த்து சுரேஷ் கொண்டேடி இதனை தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறாம்.

ஏன் தமிழ் பேர் வைக்கலை?

ஏன் தமிழ் பேர் வைக்கலை?

கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டப்பட்டு வந்தன. முதன் முதலாக ‘பீட்ஸா' என்று பெயர் சூட்டப்பட்டு வெளியாகியிருக்கிறது.

பேர் பஞ்சம் தீருமா?

பேர் பஞ்சம் தீருமா?

சினிமாவில் தலைப்புகளுக்கு ஒரு போட்டியே நிலவுகிறது. பீட்ஸாவின் வெற்றியினால் இனி திரைப்படங்களுக்கு இட்லி, தோசை, போண்டா, வட கறி, கொத்துக் குறி, முட்டை பரோட்டா, மூளை வறுவல் என்று சாப்பிடும் ஐட்டங்களை வைத்தாலும் ஆச்சரியமில்லை. (ஏதோ நம்மால முடிஞ்ச ஐடியா)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X