ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த வரவேற்பும்.. எழுந்த எதிர்ப்பும்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் எதிர்ப்புகள் இன்றைய டாப் 5 பீட்ஸில் அலசியுள்ளார் பிகே.

Recommended Video

ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த வரவேற்பும்.. எழுந்த எதிர்ப்பும்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

குட்டி பெண்

குட்டி பெண்

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், ஜெய்பீம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் எதிர்ப்பு குறித்து கூறியுள்ளார். அதன்படி ஜெய்பீட் படத்தில் நடித்த படத்தில் நடித்த குட்டி பெண் தான் படித்த பள்ளிக்கூடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்தும், சிறையில் இருந்து வெளியே வரும் போது சாதி வாரியாக கணக்கெடுப்படும் காட்சிக்கு ஒட்டர் சமூகம் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் கூறியுள்ளார்.

ஜெய்பீம் கதாபாத்திரங்கள்

ஜெய்பீம் கதாபாத்திரங்கள்

இதேபோல் ஜெய் பீம் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்தும் கூறியுள்ளார் பிகே. குறிப்பாக லிஜிமோல் ஜோஸ் நடித்துள்ள கதாப்பாத்திரம், மணிகண்டன், பிரகாஷ் ராஜ் என ஒவ்வொருவரும் தங்களின் கதாப்பாத்திரங்களை எவ்வளவு சிறப்பாக செய்துள்ளனர் என்பது குறித்தும் கூறியுள்ளார்.

இந்தி வாலாக்கள்

இந்தி வாலாக்கள்

மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் படத்தின் ஒரு காட்சியில் இந்தியில் பேசும் நபரிடம் தமிழில் பேசுமாறு கூறியதற்கு இந்தி வாலாக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் கூறியுள்ளார் பிகே. இதுதொடர்பாக இவ்வளவுதானா உன் புரிதல் என எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் கூறியிருக்கிறார் பிகே.

ராஜா

ராஜா

ஜெய் பீம் திரைப்படம் சினிமாகாரர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் பீம் படத்தை பார்த்த ரசிகர்களும் அரசியல் பிரமுகர்களும் பாராட்டு தெரிவித்தது குறித்தும் கூறியுள்ளார் பிகே. மேலும் மும்மொழிக் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தை 5 மொழிகளில் வெளியிட்டது ஏன் என ஹெச் ராஜா டிவிட்டியது குறித்தும் கூறியுள்ளார்.

இயக்குனர் வருத்தம்

இயக்குனர் வருத்தம்

இதனிடையே ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை தவறாக காட்டியது குறித்து பாமக உட்பட அச்சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்னியர் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து படத்தின் இயக்குநரான ஞானவேல் இதற்காக வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X