வாரிசு பட பாடல் முதல் பிருத்விராஜின் தெலுங்கு பட ஆசை வரை.. இன்றைய டாப் 5 பிகே பீட்ஸ்!
சென்னை: பிகேவின் டாப் 5 பீட்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் சுவாரஸ்யமான செய்திகளை வீடியோவாக பேசி வருகிறார்.
Recommended Video
வாரிசு படத்தில் தமன் செய்யப் போகும் மேஜிக் முதல் கடுவா படத்தின் புரமோஷனில் பிருத்விராஜ் பேசியது வரை ஏகப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, மெஹ்ரின் பிர்சடா, பிரபு, குஷ்பு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக்கை நடிகர் விஜய் தனது ட்விட்டரில் வெளியிட்டு டிரெண்டாக்கினார்.
இந்நிலையில், தமன் இசையில் உருவாகி வரும் வாரிசு படத்தில் ஆல் தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்படப் போவதாக பரவி வரும் தகவலை முதல் பீட்டாக கூறியுள்ளார்.
இரண்டாவது செய்தியாக இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கப் போவதாக வலம் வரும் தகவலை கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிளான தாய் கிழவி பாடல் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவியதாகவும் பிகே கூறியுள்ளார். தனுஷ் மற்றும் அனிருத் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த நிலையில், இந்த பாடல் ஏன் ஹிட் அடிக்கவில்லை, இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களையும் அலசி உள்ளார்.
அடுத்த டாப்பிக்காக யானை பட ஹீரோ அருண் விஜய் விரைவில் பாலிவுட் படங்களில் நடிக்கப் போவதாக தனது ஆசையை வெளிப்படுத்திய விஷயத்தையும் யானை படம் நிச்சயம் ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார்.
கடைசியாக கடுவா படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த நடிகர் பிருத்விராஜ் விரைவில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளதை பற்றி பேசியுள்ளார். ஏற்கனவே பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிஃபர் படம் சிரஞ்சீவி நடிப்பில் காட் ஃபாதர் எனும் டைட்டிலில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











