லயோலாவில் களைக்கட்டிய மயிலாட்டம்.. ஒயிலாட்டம்.. நாட்டுப்புற கலைகள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: இன்றைய டாப் 5 பீட்ஸில் பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உட்பட நாட்டுப்புற கிராமிய கலைகள் குறித்து அலசுகிறார் பிகே.
Recommended Video
டாப் 5 பீட்ஸில் வழக்கமாக தமிழ் சினிமா குறித்த அப்டேட்டுகளை வழங்குவார் பிகே. ஆனால் இன்றைய வீடியோவில் பறையாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், மலைவாழ் மக்களின் ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கிராமிய கலைகள் குறித்து அலசியுள்ளார்.

இதில் லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது விழாவில், வாழ்வாதார கோரிக்கைகளை முன் வைத்து 70 வயதுக்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார் மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் காளிஸ்வரன்.
இந்த விழாவில் புலிக்கொத்தி பாண்டி, மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா, சமூத்திரக்கனி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மரக்கால் ஆட்டம், கரகாட்டம் என பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் கலைக்கட்டின.


Click it and Unblock the Notifications











