லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: விவசாயிகளின் ஆட்டமான ஒயிலாட்டம் குறித்த தகவல்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
லயோலா கல்லூரியில் கடந்த வாரம் வீதி விருது விழா நடைபெற்றது. இதில் வாழ்வாதார கோரிக்கைகளை முன் வைத்து 70 வயதுக்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கினார் மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் காளிஸ்வரன்.

இந்த விழாவில் இயக்குநர் முத்தையா, சமூத்திரக்கனி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மரக்கால் ஆட்டம், கரகாட்டம் என பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
கடந்த டாப் 5 பீட்டிஸில் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சிலம்பாட்டம் மற்றும் சிலம்பாட்டத்தின் வகைகள் குறித்து விளக்கினார் பிகே. இந்நிலையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விவசாயிகளின் ஆட்டமான ஒயிலாட்டம் மற்றும் சாட்டைக்குச்சி ஆட்டம் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











