இந்தியன் 2 படத்தில் பிரமாண்ட சண்டைக்காட்சிகள்.. எத்தனை பேர் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

Recommended Video

இந்தியன் 2 படத்தில் பிரமாண்ட சண்டைக்காட்சிகள்.. எத்தனை பேர் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்

சென்னை: இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகள் உட்பட தமிழ் சினிமாவில் உள்ள புத்தம் புதிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான விஷயங்கள் நடைபெற்று வருகின்றனர். அவற்றில் முக்கியமான டாப் 5 தகவல்கள் மட்டும் நாள்தோறும் டாப் பீட்ஸ் 5ல் வீடியோவாக வழங்கப்பட்டு வருகிறது.

PK Presents top 5 updates in Tamil cinema

அந்த வகையில் டாப் 5 பீட்ஸில் இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள பிரமாண்ட சண்டைக்காட்சிகள் குறித்த தகவல்களை வழங்கியிருக்கிறார் பிகே. இந்தியன் 2 படம் நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு சண்டைக்காட்சியில் 3 ஆயிரம் பேரை பயன்படுத்தி காட்சியாக்கப்பட்டதாகவும், மற்றொரு சண்டைக்காட்சியில் 300 பேர் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக நடிகர் அரவிந்த் சாமி அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்ஸ் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கப்பட்டுள்ளது. தனி ஒருவன் மற்றும் போகன் படங்களை தொடர்ந்து அரவிந்த் சாமிக்கு வில்லன் கதாப்பாத்திரமே வழங்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நடித்து வரும் சதுரங்கவேட்டை 2, வணங்கா முடி, நரகாசுரன், ஆகிய படங்களிலும் வில்லன் கதாப்பாத்திரம் தான் என்று கூறப்படுகிறது. இதில் வணங்காமுடி படம் விரைவில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

மேலும் சூரரைப் போற்று படத்தின் பட்ஜெட் குறித்த தகவலையும் வழங்கியிருக்கிறார் பிகே. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள சூரரை போற்று படம் தற்போதே 40 கோடி ரூபாய் பிஸ்னஸ் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்து சத்தியராஜ், பார்த்திபன், ஷ்ரேயா ஆகியோரின் வெப் சீரிஸ் குறித்த தகவல், மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படம் குறித்த தகவல்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியிருக்கிறார் பிகே. அந்த வீடியோ உங்களுக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X