2020ஆம் ஆண்டில் நடந்த முக்கிய சம்பவங்கள்.. பிகேவின் டாப் பட்டியல்!
சென்னை: 2021ஆம் ஆண்டு புதிய நம்பிக்கையுடன் பிறந்துள்ள நிலையில் 2020ஆம் ஆண்டில் நடந்த சில முக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார் பிகே.
Recommended Video

2020 ஆம் ஆண்டு விடை பெற்று 2021ஆம் ஆண்டை புதிய நம்பிக்கையுடன் வரவேற்றுள்ளனர் மக்கள். இந்நிலையில் கடந்த ஆண்டில் நடந்த சில முக்கிய சம்பவங்களை பிகே பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆஸ்திரேலியா காட்டுத் தீ மற்றும் உலகையே உலுக்கிய கொரோனா முதன் முறையாக கண்டறியப்பட்ட தகவல்களை கூறியுள்ளார்.
பிப்ரவரி 11ஆம் தேதி கொரோனா வைரஸுக்கு உலக சுகாதார மையம் கோவிட் 19 என பெயர் வைத்தது. மேலும்
பிப்ரவரி 23ஆம் தேதி வெடித்த குடியுரிமை சட்டம் போராட்டம் உள்ளிட்ட தகவல்களையும் வழங்கியுள்ளார் பிகே.
மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிப்ரவரி 29 ஆம் தேதி இத்தாலியில் முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 11 ஆம் தேதி கொரோனா வைரஸை பெருந்தொற்று என உலக சுகாதாரமையம் அறிவித்தது உள்ளிட்ட தகவல்களையும் கூறியுள்ளார்.
மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. ஏப்ரல் 1 ஆம் தேதி கொரோனா அச்சத்தால் ஏமன் அரசு கைதிகளை விடுதலை செய்தது.
ஏப்ரல் 5ஆம் தேதி புலிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்க அதிபர் நிறுத்தியது உள்ளிட்ட தகவல்களையும் வழங்கியுள்ளார்.
மேலும் ஆந்திர விஷ வாயு கசிவால் 19 பேர் பலியானது, இந்தியா சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை, ஆம்பன் புயல் தாக்கம், பாகிஸ்தான் விமான விபத்தில் 99 பேர் பலியானது மற்றும் அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்
ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











