2020ஆம் ஆண்டு அரங்கேறிய முக்கிய நிகழ்வுகள்.. பட்டியலிடும் பிகே.. பார்ட் 2!
சென்னை: 2020ஆம் ஆண்டு நடந்த முக்கிய சம்பவங்களை பார்ட் இரண்டாக பட்டியலிட்டுள்ளார் பிகே.
Recommended Video
2020ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கும் உலக மக்களும் சோதனைகள் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. தற்போது புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் சோதனைகள் மாறும் என நம்பியுள்ளனர் மக்கள்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிகே. ஏற்கனவே ஒரு வீடியோ வெளியான நிலையில் இன்று பார்ட் 2 என இரண்டாவது வீடியோவை வெளியிட்டுள்ளார் பிகே.
அதன்படி ஜூலை 2 ஆம் தேதி மியான்மர் நிலச்சரிவில் சிக்கி 174 பேர் பலியாயினர். ஜூலை 12ஆம் தேதி சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 141 பேர் பலியாயினர். ஜூலை 15ஆம் தேதி 15 ஒபாமா , பில்கேட்ஸ் போன்றோரின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன.
ஜூலை 25 ஆம் தேதி வடகொரியாவில் முதல் முறையாக கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 4ஆம் தேதி லெபனான் நாட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் 200 பேர் பலியாயினர்.
மேலும் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனாவுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பான் பிரதமர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பதவி விலகியது உள்ளிட்ட தகவல்களையும் வழங்கியுள்ளார் பிகே.
இதேபோல் செப்டம்பர் மாதம் அர்மேனியா மற்றும் அசர் பைஜான் நாடுகளில் போராட்டம் வெடித்தது. அக்டோபர் மாதம் செனகல் நாட்டில் அகதிகள் சென்ற கப்பல் கவிழ்ந்து 140 பேர் பலியானது உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றன. மேலும்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80 பேர் பலியாயினர்.
நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடன் வெற்றி பெற்றது. மேலும் நவம்பர் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது. மேலும் இந்தியாவில் வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டதும், அதற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியதும் நவம்பர் மாதத்தில்தான். டிசம்பர் 8ஆம் தேதி கொரோனாவுக்கு இங்கிலாந்தில் தடுப்பூசி போட தொடங்கியது உள்ளிட்ட தகவல்களையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











