காதலர் தின ஸ்பெஷல்.. பன்னிக்குட்டியை கொடுத்து காதலை சொல்லும் இளைஞர்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Recommended Video
சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு இன்றைய டாப் 5 பீட்ஸில் வித்தியாசமான தகவல்களை வழங்கியிருக்கிறார் பிகே.
தமிழ் ஒன் இந்தியா பிலிமி பீட்டில் பீட்ஸ் 5 என நாள்தோறும் டாப் 5 அப்டேட்ஸ்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. ஆனால் இன்று காதலர் தினம் என்பதால் உலக நாடுகள் எப்படி காதலர் தினத்தை கொண்டாடுகின்றன என்ற வித்தியாசமான தகவல்களை கூறியிருக்கிறார்.

அதன்படி இத்தாலியில் காலையில் வெளியில் வரும் பெண்கள், தாங்கள் முதலில் காணும் ஆண்களை தங்களின் காதலனாக நிர்ணயிக்கின்றனர். இதற்காகவே அந்நாட்டு இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்கள் உள்ள வீட்டின் வாசலில் நிற்பார்களாம்.
ஜெர்மனியில் காதலிக்கும் ஆண்கள் தாங்கள் காதலிக்கும் பெண்களிடம் பன்னிக்குட்டியையும் இஞ்சி மிட்டாயையும்கொடுத்து காதலை சொல்வார்களாம். அந்த நபரை பிடித்தால் பெண்கள் அந்த பன்னிக்குட்டியையும் இஞ்சி மிட்டாயையும் ஏற்றுக்கொள்வார்களாம்
இதேபோல் தாய்லாந்தில் 99 ரோஜாக்களை கொடுத்து காதலர்கள் தங்களின் காதலை சொல்ல வேண்டுமாம். திருமணம் செய்து கொள்ள விரும்புவர்கள் 108 ரோஜாக்களை கொடுப்பார்களாம்.
டென்மாக்கில் காதலர் தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறதாம். இதேபோல் காதல் கடிதங்கள், டேனிஷ் ரொட்டி ஆகியவையும் பகிரப்பட்டு வருகிறதாம்.
இதேபால் பிரான்ஸ், தென் கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வெவ்வேறு வித்தியாசமான முறையில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறதாம். அதுகுறித்த தகவல்கள் வீடியோவாக இதோ..


Click it and Unblock the Notifications











