ஆண் குயில் எஸ்பிபி.. இசைத்துறைக்குள் வந்தது எப்படி? சுவாரசிய தகவல்கள்.. ஒன் இந்தியா தமிழ் தளத்தில்!

சென்னை: எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவர் குறித்த சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

Recommended Video

ஆண் குயில் எஸ்பிபி.. இசைத்துறைக்குள் வந்தது எப்படி? சுவாரசிய தகவல்கள்

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இடையில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் அவர் நலம்பெற வேண்டி மொத்த தமிழகமும் அவருக்காக கூட்டுப் பிரார்த்தைனை செய்தது.

சுவாரசிய தகவல்

சுவாரசிய தகவல்

அதன் பலனாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மருத்துவமனைகளின் அறிக்கைகளின் மூலம் காண முடிகிறது. இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் குறித்த சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

இடையே சேர்க்கும் விஷயம்

இடையே சேர்க்கும் விஷயம்

அதில், எஸ்பிபி ஒரு பாடலை பாடுகிறார் என்றால், இடை இடையே அவர் சேர்க்கும் சில விஷயங்கள், குறிப்பாக சிரிப்பு, குரல் மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் அவர் பாடலை கேட்க தூண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

முதல் பரிசு

முதல் பரிசு

சங்கீத உலகின் சக்ரவர்த்தியான எஸ்பிபி தெலுங்கு சினிமாவில் முதல் பாடலை பாடியதும், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்பிபிக்கு இரண்டாம் பரிசு அளிக்கப்பட்டதும் அதற்கு பிரபல பாடகியான எஸ் ஜானகி எதிர்ப்பு தெரிவித்து முதல் பரிசு கொடுத்த தகவலையும் கூறியிருக்கிறார்.

கோதண்டபாணி ஸ்டுடியோஸ்

கோதண்டபாணி ஸ்டுடியோஸ்

பத்ம விருதுகள் தேசிய விருதுகள் என பல விருதுகளை குவித்துள்ள எஸ்பிபி பாடகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் இருந்த தகவலையும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கோதண்டபாணியின் பெயரில் ஸ்டுடியோ தொடங்கியது உள்ளிட்ட தகவல்களை வழங்கியுள்ளார்.

சங்கராபரணம்

சங்கராபரணம்

கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளாமலேயே சங்கராபரணம் படத்தில் இவர் பாடிய பாடல்கள் அச்சுபிசறாமல் இருந்ததும் அதற்காக விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் நல்ல நட்பை பாராட்டி வரும் எஸ்பிபி தெலுங்கில் பல ராப் பாடல்களை எழுதியுள்ளார். எஸ்பிபி குறித்த இன்னும் பல சுவாரசிய தகவல்களை வழங்கியுள்ளார் பிகே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X