பாசிட்டிவ் டு நெகட்டிவ்.. வலிமை படத்தை பற்றிய டாப் 5 பீட்ஸ்.. பிகே வீடியோ இதோ!
சென்னை: அஜித் குமாரின் வலிமை திரைப்படம் பாசிட்டிவ் ஆக ஆரம்பிக்கப்பட்டு ஏகப்பட்ட நெகட்டிவ்களை சந்தித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
Recommended Video
இந்நிலையில், வலிமை படத்தின் வசூல் முதல் FDFS காட்சியின் போது தியேட்டரில் நடந்த ரகளைகள் வரை டாப் 5 சுவாரஸ்ய தகவலுடன் பிகே பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.
ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ரிப்போர்ட்டே நடிகர் அஜித்தின் வலிமை படத்திற்கு நன்றாக இருந்த நிலையில், முதல் வாரத்தில் படத்தின் வசூல் நல்ல விதமாக உள்ளதாக வெளியான தகவல்களை தனது ஸ்டைலில் தொகுத்து வழங்கியிருக்கிறார் பிகே.

சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை எல்லா இடங்களிலும் கேட்டு சர்வதேச ரசிகர்களையே திக்குமுக்காட செய்தனர்.
இந்நிலையில், வலிமை படத்திற்கு ஆரம்பத்தில் பாசிட்டிவ் ரிவ்யூக்கள் வந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக இயக்குநர் எச் வினோத்தின் டச் கொஞ்சம் கூட இல்லாமல் இந்த படம் சொதப்பி விட்டதே என பல விமர்சகர்களும் விமர்சனங்களை அடுக்க வலிமை படத்தின் டிக்கெட் புக்கிங்கிலும் பெரிய பிரச்சனை வந்து விட்டது.
மேலும், இயக்குநர் எச். வினோத்தை ஒருவரும் பாராட்டாமல் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்பராயன் மாஸ்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவையே பலரும் பாராட்டி இருந்தனர்.
வலிமை படத்தின் முதல் நாள் ஷோவில் தியேட்டரில் ரசிகர்கள் பால், தயிர் திருடிய செய்திகள், கோவை தியேட்டரில் குண்டு வெடிப்பு, சேலர் ஏ.ஆர்.ஆர்.எஸ். தியேட்டரின் ஷட்டரை உடைத்து ரசிகர்கள் ரகளை செய்தது என ஏகப்பட்ட நெகட்டிவிட்டி விஷயங்கள் வலிமை படத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது என்றும் பிகே தனது வீடியோவில் விரிவாக பேசியிருப்பதை கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











