Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- News
சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மகான் படத்தை பார்க்க இந்த 5 விஷயங்கள் உதவும்.. இன்றைய டாப் 5 பீட்ஸ் இதோ!
சென்னை: பிகேவின் இன்றைய டாப் 5 பீட்ஸ் வீடியோ முழுக்க முழுக்க சியான் விக்ரமின் மகான் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மனங்களை கவர்ந்துள்ள மகான் திரைப்படம் ஒடிடி தளத்தில் சக்கைப் போடு போட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தை பார்க்க வேண்டிய 5 காரணங்கள் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், ஆடுகளம் நரேன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மகான் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக மாறி உள்ளது என்பதை முதல் பீட்டாக சொல்லி உள்ள நம்ம பிகே தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் அழகாக சொல்லி உள்ளார்.
மகான் படத்தில் விக்ரம் வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டாம் பாதியில் வரும் விக்ரம் மகனின் துருவ் விக்ரம் கதாபாத்திரம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பாபி சிம்ஹா நடிப்பில் மிரட்டுகிறார் என்றும் கூறியுள்ளார்.
சிம்ரன் மட்டுமே படத்தில் உள்ளதாகவும் வாணி போஜனின் கதாபாத்திரம் எங்கே காணாமல் போனது என்கிற கேள்வியையும் இந்த வீடியோவில் அவர் எழுப்பி உள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்திற்கு பிறகு கம்பேக் போல சியான் விக்ரமுக்கு தரமான ஒரு படத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் என்றும் ஏன் இதை தியேட்டரில் வெளியிடவில்லை என்கிற கேள்வியைத்தான் படம் பார்க்கும் அத்தனை ரசிகர்களும் கேட்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் எல்லாம் வெறித்தனம் ஓவர்லோடட் ஆக உள்ளதாக கூறியுள்ள பிகே மேலும், மகான் படத்தை பார்க்க தேவையான சுவாரஸ்ய விஷயங்களை இந்த வீடியோவில் தொகுத்து கூறியுள்ளார். மிஸ் பண்ணாமல் வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணுங்க!
மகான்
பக்கா
மாஸ்...
சமூக
வலைதளங்களில்
கொண்டாடும்
ரசிகர்கள்!