Top 5 Beats: பிக் பாஸ் 5ல் கமலுக்கு சம்பளம் இவ்வளவா? கொடி கட்டிப் பறக்கும் நயன்தாராவின் மார்க்கெட்!
சென்னை: பிகேவின் இன்றைய டாப் 5 பீட்ஸ் வீடியோவில் கோலிவுட் பற்றிய பல பரபரப்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
நடிகர் வெங்கட் சுபாவின் மறைவு தொடங்கி இரண்டு படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன் வரை ஏகப்பட்ட தகவல்களை அடுக்கிக் கொண்டு வந்துள்ளார்.
பிகேவின் ஸ்டைலில் அவர் சேகரித்த தகவல்களை சொல்லும் வீடியோவை மறக்காம பாருங்க!

வெங்கட் சுபா காலமானார்
முதல் பீட்ஸாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் குணசித்திர வேடத்தில் நடித்து மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த நடிகர் வெங்கட் சுபாவின் மறைவு இந்த வாரம் சினிமா உலகில் ஏற்படுத்திய சோகத்தை வெளிப்படுத்துகிறது.

ஒஎன்வி விருது சர்ச்சை
இரண்டாவது பீட்ஸில் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட ஓஎன்வி விருதும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளும், அதன் காரணமாக அந்த விருதை அவர் திருப்பிக் கொடுத்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கமல்ஹாசன் சம்பளம்
மூன்றாவதாக பிக் பாஸ் தமிழ் சீசன் 5லும் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாகவும், மேலும், அதற்காக கமல்ஹாசனுக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார் நம்ம பிகே.

டாப் கியரில் நயன்
கொரோனா காலத்தில் நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்து வரும் நிலையில், நெற்றிக்கண் படத்திற்கு பிறகு கிடுகிடுவென தனது சம்பளத்தை நடிகை நயன்தாரா உயர்த்தி உள்ளதாகவும் சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

காத்திருக்கும் எஸ்கே
இறுதியாக டாக்டர் மற்றும் அயலான் என் இரு படங்களை முடித்து வைத்துக் கொண்டு அதனை தியேட்டரில் வெளியிட கொரோனா பரவல் குறைவதை நடிகர் சிவகார்த்திகேயன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் தகவலையும் பிகே கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











