Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வீட்டிலேயே கொரோனா பரிசோதனை.. சிவகார்த்திகேயனை வம்பிழுத்த எச். ராஜா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிகேவின் இன்றைய டாப் 5 வீடியோவில் ஏகப்பட்ட சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
சினிமாவை தாண்டி கொரோனா வைரஸ், அரசியல், யாஸ் புயல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் இந்த டாப் 5 பீட்ஸில் தாங்கி வந்து கொடுத்துள்ளார்.
நடிகை மஞ்சிமாவும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கிட்டாங்க
மேலும், கொரோனா 3வது அலையில் இருந்து தப்பிக்க கொரோனா தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கோங்க என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் கொத்து கொத்தாக மரணித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் என்று தனது முதல் பீட்டில் கூறியுள்ளார். தடுப்பூசி பற்றாக்குறைக்கு ஏதும் தீர்வு இருக்கா பிகே?

வீட்டிலேயே பரிசோதனை
தனது இரண்டாவது பீட்டில் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனைகளுக்கு சென்று காத்திருக்க தேவையில்லை என்றும் வீட்டிலேயே கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளும் வகையில் கோவிட் செல்ஃப் டெஸ்ட் கிட் உருவாக்கப்பட்டுள்ளது. சளி மாதிரிகளை கொண்டு அந்த பரிசோதனையை மேற்கொண்டால் உடனடியாக ரிசல்ட் கிடைத்து விடும், கொரோனா உறுதியான உடனே தனிமைப்படுத்திக் கொண்டால் குடும்ப உறுப்பினர்கள் யாரும் பாதிக்கப்பட தேவையில்லை. அதன் விலை 250 ரூபாய் என்றும் நிர்ணயித்துள்ளனர். விரைவில் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

யாஸ் புயல்
ஒடிசா மாநிலத்தை தாக்க உள்ள யாஸ் புயல் அப்படியே தமிழ்நாட்டுக்கும் ஷிஃப்ட் அடித்து பாதிப்புகளை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்ததையும் மக்களுக்காக கூறியுள்ளார் நம்ம பிகே.

எச். ராஜா வம்பு
நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா கொலை செய்யப்பட்டார் என வீண் சர்ச்சையை உருவாக்கி உள்ளார் எச். ராஜா என்றும் இதுதொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் எந்த பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் எச். ராஜாவை வெளுத்து வாங்கி வருகின்றனர் என்றும் அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்கிற டாப் பீட்டையும் எடுத்து வந்துள்ளார்.

கண்ணீர் கடலில் திரையுலகம்
தெலுங்கு திரையுலகின் பிரபல பி.ஆர்.ஓவும் தயாரிப்பாளருமான பி.ஏ. ராஜுவின் மறைவுக்கு மகேஷ் பாபு முதல் சமந்தா, காஜல் அகர்வால், பிரகாஷ் ராஜ் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் பி.ஏ. ராஜுவின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்த சோகத்தையும் கூறி தனது டாப் 5 பீட்ஸை முடித்துள்ளார். மறக்காம வீடியோவை பாருங்க!