twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிகரெட்டுடன் சினிமா விளம்பரம்- மலையாள நடிகர் மது மீது அரசு வழக்கு!

    By Shankar
    |

    Plaint against Madhu over smoking poster
    கொச்சி: புதிய படம் ஒன்றின் சுவரொட்டி விளம்பரங்களில் சிகரெட்டுடன் தோன்றியதற்காக மலையாள நடிகர் மதுவுக்கு கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

    தேசிய விருது பெற்ற 'செம்மீன்' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் மது. ரஜினிந்த் தந்தையாக 'தர்மதுரை' படத்திலும் நடித்து இருந்தார்.

    எண்பது வயதான மது, இப்போதும் நடித்து வருகிறார். இப்போது 'தெய்வத்தின்டே கையொப்பு' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கேரளாவில் அடுத்த வாரம் வெளிவருகிறது.

    இதையொட்டி இந்த படத்தின் விளம்பர போஸ்டர்கள் கேரளாவில் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. இவற்றில் நடிகர் மது சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    கேரளாவில் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. புகை பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவிலோ அதன் விளம்பரங்களிலோ இடம் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதை மீறி புகை பிடிக்கும் காட்சி அடங்கிய நடிகர் மதுவின் போஸ்டர் ஒட்டப்பட்டது கேரள சுகாதார துறையினர் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நடிகர் மது மீது வழக்கு தொடர்ந்துள்ளது கேரள அரசு. இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்ற பிரச்சினை தொடர்பாக பிரபல நடிகர் மோகன்லால், நடிகை மைதீலி ஆகியோர் மீது சுகாதார துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

    English summary
    After actors Mythli and Mohan Lal, now it's the turn of veteran action Madhu to face legal action for violating rules against promotion of tobacco products in public.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X