டிடி போற இடமெல்லாம் மகிழ்ச்சி கொரோனாவா பரவும் .. ரோபோ சங்கர் கலகல!
சென்னை : பிளான் பண்ணி பண்ணனும் இசை வெளியீட்டு விழாவின் ரோபோ சங்கர் கலகலப்பாக பேசி அசரடித்தார்.
ரியோ ராஜ் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் பிளான் பண்ணி பண்ணனும். இந்த படத்தை பாணா காத்தாடி மற்றும் செம்ம போத ஆகாதே படத்தை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தை பாசிடிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன்,பால சரவணன் ,ரோபோ சங்கர்,தங்கதுரை,சந்தான பாரதி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .

இசை வெளியீட்டு விழா
தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவும் சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரோபோ சங்கர் தொகுப்பாளர் டிடியும் கொரோனாவும் ஒன்று மாஸ்க் அணிவித்து பார்த்தால் டிடியும் சீன பெண் போல தான் இருப்பார் என்று கலாய்த்து உள்ளார்.மேலும் கொரோனா மாதிரி தான் டிடியும், டிடி போகிற இடமெல்லாம் மகிழ்ச்சி பரவும் என்று கூறியுள்ளார் .

பெண் குழந்தை
கடந்து நான்கு நாட்களுக்கு முன்பு நடிகர் ரியோ ராஜிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கு மேடையிலே வாழ்த்துக்களை கூறிய ரோபோ சங்கர் படத்தின் பெயரை போல பிளான் பண்ணி பண்ணனும் என்று வைத்து இருக்கிறார்கள் ஆனால் உண்மையிலே பிளான் பண்ணி படத்தை ரிலீஸ் பண்ணது ரியோதான் என்று ஜாலியாக கூறியுள்ளார் .

பத்ரி வெங்கடேஷ் இயக்கம்
இந்த படத்தை பாணா காத்தாடி மற்றும் செம்ம போத ஆகாதே படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் தான் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இயக்குனருக்கு நன்றி கூறி கொண்ட நடிகர் ரோபோ சங்கர். இயக்குனர் இவ்வளவு சூப்பராக படத்தை வெறும் 28 நாட்களில் எடுத்து விட்டார் என கூறினார்.மேலும் இதற்கு முன் வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தில் தான் 33 நாட்களில் நடித்ததாகவும் அதற்கு பிறகு இதுதான் மிகவும் குறுகிய நாட்களில் எடுக்கபட்டு நான் நடித்த படம் என்று கூறினார் .

காமெடியில் தங்கதுரை
தங்கதுரை இந்த படத்தில் ஒரு முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் .தமிழ் சினிமா வரலாற்றிலே முதல் முறையாக ஒரு ஸ்டென்ட் மாஸ்டரை அழ விட்டவர் நடிகர் தங்கதுரை தான் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் ரோபோ சங்கர் .ஏனெனில் அப்படி ஸ்டென்ட் மாஸ்டரை டார்ச்சர் செய்து விட்டறாம் தங்கதுரை .
Recommended Video

ஆலம்பனா ரோபோ சங்கர்
ரோபோ சங்கர் தொடர்ந்து நல்ல படங்களில் ஒப்பந்தமாகி நல்ல நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைத்து வருகிறார் .சமீபத்தில் அவர் நல்ல துணை நடிகராகவும் நடிக்க துவங்கி விட்டார் ஹீரோ படத்தில் கூட நகைச்சுவை கலந்த குணசித்திர நடிகராகத்தான் நடித்திருப்பார் ரோபோ சங்கர். அடுத்ததாக இவர் ஆலம்பனா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











