Just In
- 3 hrs ago
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- 4 hrs ago
ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா
- 4 hrs ago
உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்!
- 5 hrs ago
நான் பல்லாவரம் பொண்ணு.. என்னைப் பத்தி அதிகமா இதுக்குத் தான் தெரியும்.. வைரலாகும் சமந்தாவின் வீடியோ!
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Automobiles
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இணைந்து செய்த செயல்.. பிளான் பண்ணி பண்ணனும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு ரியோ ராஜ் நடிப்பில் உருவாகி வரும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து ரியோ ராஜின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு ரியோவுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
முத்தம் கொடுக்க, விதம் விதமா யோசிக்கிறாய்ங்களே... வைரலாகும் சாரா அலிகானின் சரமாரி லிப் லாக்
|
விஜய்சேதுபதி
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய விஜய்சேதுபதி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரியோ ராஜின் அடுத்த படமான பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளார். மேலும், ஆல் தி பெஸ்ட் டா தம்பி என ரியோவை வாழ்த்தியுள்ளார்.

சேதுபதி ஹீரோயின்
விஜய்சேதுபதியின் பீட்சா, சேதுபதி, சீதக்காதி படங்களில் நடித்த ரம்யா நம்பீசன் தான் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாலசரவணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
|
முதல் பட தயாரிப்பாளர்
ரியோ ராஜின் முதல் பட தயாரிப்பாளரான சிவகார்த்திகேயனும் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை ரியோவுக்கு தெரிவித்துள்ளார்.
|
ரியோ நன்றி
ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு படத்தின் நாயகன் ரியோ ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
|
டாக்டர் அப்டேட்
சிவகார்த்திகேயன் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் டாக்டர் படத்தின் அப்டேட் எப்போ வரும் ஃபர்ஸ்ட் லுக் விடுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
|
மாஸ்டர் லுக்
விஜய்சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் அவரது ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் லுக்குக்காக வெயிட் பண்றோம்ணா சீக்கிரம் விடுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
|
வலிமை பிஜிஎம்
பிளான் பண்ணி பண்ணனும் படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவும் மோஷன் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரிடம் தல அஜித் ரசிகர்கள் வலிமை படம் குறித்த அப்டேட் மற்றும் பிஜிஎம் எப்போ என கேள்வி கேட்டு வருகின்றனர்.