யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது, எனது கனவுகளில் ஒன்று...ரியோ ராஜ் பெருமிதம் !

சென்னை : Positive Print Studios சார்பில் L சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும், ரொமாண்டிக் காமெடி திரைப்படம் "பிளான் பண்ணி பண்ணனும்". 2021 செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாவதை ஒட்டி, படக்குழு அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்

Recommended Video

Rio Raj | Remya Nambeesan | Plan Panni Pannanum | Tamil Filmibeat

நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது... பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும், இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவையும் தந்து வெற்றிப்பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம்.

எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது, எனது கனவுகளில் ஒன்று, அது இப்போது நனவாகியிருக்கிறது. கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களை தாண்டி, இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த பொதுமுடக்கம் நம் மீது பெரும் அழுத்தங்களையும், சோகங்களையும் தந்தது. அந்த கடினமான காலகட்டத்தை தாண்டி, இப்போது அனைவரும் திரையரங்குகள் வந்து திரைபடங்கள் பார்த்து மகிழலாம்.

கடினமான காலமாக

கடினமான காலமாக

ரம்யா நம்பீசன் கூறியதாவது... மீண்டும் திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளது, எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரையுலகில் இது அனைவருக்கும் கடினமான காலமாக இருந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தது. ஆனாலும் அனைவரும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும். அப்பொது தான் சினிமா வளரும். இத்திரைப்படத்தை நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ஆதரவை தர வேண்டும் நன்றி என்று சொல்லி முடித்தார் .

ஆராத்தி புகழ் பூர்ணிமா

ஆராத்தி புகழ் பூர்ணிமா

நடிகை பூர்ணிமா ரவி கூறியதாவது... இது எனது முதல் திரைப்படம். படப்பிடிப்பு அனுபவங்கள் முழுவதுமே எனக்கு புதிதாக இருந்தது. என்னை மிகவும் ஆதராவாக கவனித்துகொண்ட படக்குழு அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் எனது கதாப்பாத்திரம் குறித்து கூறும்போது.., இது மற்ற படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான தங்கை பாத்திரமாக இருக்கும் என உறுதியளித்தார். என்னை கனிவாக கவனித்து ஆதரவு தந்த படக்குழுவுக்கு நன்றி என்று சொல்லி பெருமையாக பேசி முடித்தார் .

பரிந்துரைத்த ரியோ

பரிந்துரைத்த ரியோ

நடிகர் பாலசரவணன் கூறியதாவது... நானும் ரியோ ராஜும் சகோதரர்கள் போல் தான். எங்கள் நட்பு, விஜய் டிவியின் 'கனா காணும் காலங்கள்' தொட்டே, தொடர்ந்து வருகிறது. இயக்குநர் பத்ரியிடம் என்னை இக்கதாப்பாத்திரத்திற்கு பரிந்துரைத்தற்கு ரியோ ராஜுக்கு நன்றி. குடும்பங்கள் இணைந்து, கொண்டாடி பார்க்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும் 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பாலசரவணன் நட்புடன் பேசி மகிழ்வித்தார்.

ரம்யா நம்பீசன் ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர்

ரம்யா நம்பீசன் ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர்

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது...திரையுலகை சேர்ந்தவர்களும், ஊடக நண்பர்களும் இந்த பொதுமுடக்க காலத்தில் மிகப்பெரிய துன்பங்களை கடந்து வந்தார்கள். அவையனைத்தையும் கடந்து இப்போது திரையரங்குகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதும், எங்கள் படம் வெளியாவதும், அனைவருக்குமே மிக மகிழ்ச்சி. தயாரிப்பாளர்களின் துணிச்சலான முடிவுகளால் மட்டுமே இன்று இது சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் ரியோ மிகச்சிறப்பாக செய்துள்ளார் இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். பால சரவணன் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பார். பூர்ணிமா ரவி இளைய தலைமுறை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார். 100 சதவீதம் காமெடி சரவெடியாக இத்திரைப்படம் இருக்கும், 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X