சத்தியமா இது பிளான் பண்ணாத லைவ்... இன்ஸ்டாகிராம் நேரலையில் நாளை மாலை 6 மணிக்கு !

சென்னை : பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தின் படக்குழுவினர் நாளை மாலை 5 மணிக்கு இன்டாகிராம் நேரலையில் பேச உள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக வாய்ப்பு கேட்டு கோடம்பாக்கம் முழுவதும் அலைந்த தருணங்கள் சென்று தற்போது டிக் டாக் வரை நடிகர்களை தேர்வு செய்யும் அளவிற்கு சினிமாவின் அனுகுமுறை மாறியுள்ளது. பல நடிகர்கள் சின்னத்திரை மற்றும் பிரபல நிகழ்ச்சிகள் என பல வழியாக சினிமாவில் ஹீரோக்களாக உருவாகியுள்ளனர்.

Plan panni Pannanum team has announced Instagram live 17th 6pm

சிவகார்த்திகேயன் அதில் முக்கியமானவர் ஆரம்ப காலங்களில் மிம்கிக்ரி ஆர்டிஸ்டாக இருந்த இவர் அதன் பின் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளாராகவும், பங்கேற்பாளராகவும் இருந்து மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் வருத்தபடாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் என்டர்டெயின்மென்ட் ஹீரோவாக மாறினார்.

Plan panni Pannanum team has announced Instagram live 17th 6pm

அதனை தொடர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார், இதே போல் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த ரியோ ராஜும் இதே போல் ஆரம்ப காலங்களில் சன் மியுசிக் சேனலில் விஜே வாக இருந்தார். இதையடுத்து, விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள், கேம் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளனார். அதை தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

Plan panni Pannanum team has announced Instagram live 17th 6pm

இந்த படம் ஓரளவுக்கு வெற்றிப்பெற்று ரியோவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதையடுத்து, பாணா காத்தாடி திரைபடத்தின் இயக்குனரான பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ப்ளான் பண்ணி பண்ணனும் என்ற திரைபடத்தில் ரம்யா நம்பீசனுடன் நடித்துள்ளார். இந்த படத்தின் படக்குழுவினர் நாளை மாலை 6 மணிக்கு இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசவுள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து இந்த மாதம் திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா பிரச்சினையால் பட வெளியீட்டு தேதி தள்ளுப்போய் உள்ளது.

Plan panni Pannanum team has announced Instagram live 17th 6pm

அது மட்டுமின்றி தனது குடும்பபாங்கான முகத்தால் இளைஞர்களை மனதை கவர்ந்த ரம்யா நம்பீசனும் லைவில் வருவதால் அவரின் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். யார் இந்த லைவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார்கள் என்பது பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை அதனால் தான் என்னவோ இது சத்தியமா ப்ளான் பண்ணாத லைவ் என்று பெயர் வைத்திருப்பார்கள் போல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X