பிளான் பண்ணி பண்ணனும் ஆடியோ.. இன்று டிரெய்லர் வருதுங்கோ!

சென்னை: பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

ரியோ, ரம்யா நம்பீசன், தங்கதுரை, ஷாரா போன்ற பலர் நடித்து யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து பத்ரி வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம் "பிளான் பண்ணி பண்ணனும்" ராஜேஷ் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

plan panni pannanum trailer and audio release

ரியோ பல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் சின்னத்திரை சீரியல்களில் நடிகராகவும் இருந்துள்ளார், மேலும் இவர் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா தான் இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார், இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

plan panni pannanum trailer and audio release

தற்போது இவர் நடித்து இருக்கும் திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இதன் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இவர் இதற்கு முன் அதர்வாவை வைத்து பாணா காத்தாடி மற்றும் செம போத ஆகாதே ஆகிய படங்களை இயக்கியுள்ளார் இரண்டு படங்களுமே மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் விடியலை நோக்கி என்ற குறும் படத்தை இயக்கியுள்ளார் அப்படத்திற்காக தேசிய விருது கூட வென்றுள்ளார்.

plan panni pannanum trailer and audio release

இவருக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு பத்ரி இதற்கு முன் இயக்கிய இரண்டு படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை அமைத்தார் அந்த இரண்டு படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட், தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர் இந்த ஆல்பமும் ஹிட் ஆகும் என்று ஏதிர்பாக்கப்படுகிறது.

plan panni pannanum trailer and audio release

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இன்று வெளியாகவுள்ளன

plan panni pannanum trailer and audio release

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்கிறார். இந்த விழா நாளை காலை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X