நல்ல பிளான்.. செம புரொமோஷன்.. பிளான் பண்ணி பண்ணனும் டிரைலர் எப்படி இருக்கு?
சென்னை: ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
Recommended Video
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீடு, இன்று காலை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளார்.

ரெண்டாவது படம்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பிளாக்ஷிப் யூடியூப் சேனலை சேர்ந்த கார்த்திக் இயக்கத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், நடிப்பில் ரெண்டாவது படமாக பிளான் பண்ணி பண்ணனும் உருவாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது.

இளைஞர்களுடன்
பீட்ஸா, குள்ள நரிக்கூட்டம், சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா நம்பீசன், பிக்பாஸ் கவினின் நட்புன்னா என்னான்னு தெரியுமா? படத்தில் அவருடன் ஜோடியாக நடித்தார். தற்போது, இளம் நடிகரான ரியோ ராஜுக்கு ஜோடியாக இந்த படத்தில் அசத்தலாக நடித்துள்ளார்.
டிரைலர் ரிலீஸ்
பானா காத்தாடி, செம போத ஆகாதே படங்களை இயக்கிய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகி உள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

டிரைலர் எப்படி இருக்கு?
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள ரியோ ராஜின் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டிரைலர்? என்ன மாதிரியான கதை என்று ரசிகர்கள் கெஸ் பண்ண முடியாத அளவுக்கு ஃபன் ரைடாக அமைந்துள்ளது. ஆனால், ரிப்பீட் ஆகும் வசனங்கள் டிரைலரை சுவாரஸ்யப்படுத்துவதற்கு பதிலாக சற்று ஸ்பீட் பிரேக்கர் போட்டுள்ளது.
டிரெண்டிங்
பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றுள்ளதால், ட்விட்டரில், #P3MusicLaunch, #PlanPanniPannanum, #P3Trailer என மூன்று ஹாஷ்டேக்குகளுடன் டிரெண்டாகி வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications