»   »  ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பாக்கப் போறீங்களா... பக்கத்து சீட்ல ஷாரூக் இருக்காரானு செக் பண்ணிக்குங்க...

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பாக்கப் போறீங்களா... பக்கத்து சீட்ல ஷாரூக் இருக்காரானு செக் பண்ணிக்குங்க...

Subscribe to Oneindia Tamil

மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் படம் பற்றிக் கேள்விப்பட்டு 'எப்படா அந்தப் படத்தப் பார்க்கலாம்' என் ஆர்வமாக இருக்கிறீர்களா..?

ஆமாங்க, இன்னும் ரெண்டு, மூணு நாளுக்குள்ள எப்படியும் படத்தப் பார்த்துடுவேன் என சொல்பவர் நீங்கள் தான் என்றால், இந்த நியூஸ் உங்களுக்குத் தான்.

சென்னை எக்ஸ்பிரஸ் படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் போது, படத்தில் தீபிகாவுடன் ஆடிக் கொண்டிருக்கும் ஷாரூக் திடீரென உங்கள் பக்கத்தில் அமர்ந்து, உங்களைப் போலவே படத்தை ரசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ஷாக் ஆவீர்கள் தானே...

சென்னை எக்ஸ்பிரஸ்....

சென்னை எக்ஸ்பிரஸ்....

ஷாரூக் நடித்து இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ். படத்தில் ஷாரூக்கின் ஜோடி தீபிகா படுகோனே.

ஸ்வீட் சர்ப்ரைஸ்....

ஸ்வீட் சர்ப்ரைஸ்....

நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி படத்துக்கான புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் ஷாரூக் அடுத்தகட்டமாக ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகி விட்டாராம்.

கூட்டத்தோடு கூட்டமாக...

கூட்டத்தோடு கூட்டமாக...

ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படத்தில் எக்காட்சிகளை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என கண்காணிக்க இருக்கிறாராம்.

ஆசை... ரசிகர்களை ரசிக்க ஆசை...

ஆசை... ரசிகர்களை ரசிக்க ஆசை...

சாதாரண மக்களோடு மக்களாக கலந்து, அமைதியாக ரசிகர்களின் கைத்தட்டலை ரசிக்க ஆசைப்படுகிறாராம் ஷாரூக். ஆனால், ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டால் அவர் பாடு திண்டாட்டம் தான்.

இருட்டுல தெரியாதே...

இருட்டுல தெரியாதே...

படம் போட்ட பிறகு திருட்டுத் தனமாக தியேட்டருக்குள் புகுந்து உட்கார்ந்து கொண்டால் ரசிகர்கள் தன்னை அடையாளாம் காண்பது அரிது என ஐடியா செய்துள்ளாராம் ஷாரூக்.

ஷாரூக்கானு செக் பண்ணிடுங்க பாஸ்...

ஷாரூக்கானு செக் பண்ணிடுங்க பாஸ்...

அதனால் தான் சொல்கிறோம், படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, ‘படம் எப்டி இருக்கு பாஸ்... நல்லாருக்கா..?' என அருகில் இருந்து யாராவது கேட்டால், உடனே அவரது முகத்தில் டார்ச் அடித்துப் பாருங்கள், ஏனென்றால் கேட்டது ஷாரூக்காக கூட இருக்கலாம்...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    If the Chennai Express buzz is getting on to you, and you finally decide to watch this film in a few days, please be very careful and observant about people around you inside the hall. No, we don't mean a terrorist is going to plant a bomb under your seat - no. We mean, you never know the person seated next to you might bear a striking resemblance to the actor dancing on the screen in front of you.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more