விவேக் சொன்ன ஒத்த வார்த்தை.. வரிந்துக்கட்டிக்கொண்டு வெளுத்து வாங்கிய ரசிகர்கள்! #plantforkalam
சென்னை: நடிகர் விவேக் போட்ட ஒரு டிவிட் டிவிட்டர் தளத்தையே திக்குமுக்காடச் செய்துள்ளது.
நடிகர் விவேக் படங்கள் மட்டுமின்றி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய படங்களிலும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் தீவிர ரசிகரும் ஆவார். இந்நிலையில் அப்துல்கலாமின் 88வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.
ட்ரென்ட்டாக்கலாமா?
இதனை முன்னிட்டு டிவிட்டரில் #plantforkalam என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கலாமா என கேட்டார். அவ்ளோதான் வரிந்து கட்டிய ரசிகர்கள் பிளான்ட் ஃபார் கலாம் ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
ட்ரென்டிங்
அய்யா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக.. என பிளான்ட் ஃபார் கலாம் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்துள்ளார் இவர்.
கோரிக்கை
மேலும் நாளை அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூக தளங்களில் பதிவு செய்து ட்ரென்ட் செய்ய வேண்டுகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
அஜித் ரசிகர்கள்
இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் தல ரசிகர்களான நாங்கள் ஏற்கனவே மரம் நட ஆரம்பித்துவிட்டோம் என மரம் நடும் போட்டோவை பதிவிட்டுள்ளனர் இவர்கள்.
ரசிகர்களுக்கு நன்றி
இதனை தொடந்து பிளான்ட் ஃபார் கலாம் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து கொண்டு இருக்கும் தனுஷ் மற்றும் சூர்யா ரசிகப் பெருமக்களுக்கும் என் நன்றி என தெரிவித்துள்ளார் விவேக்.


Click it and Unblock the Notifications











