For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Plat"form"லிருந்து great"form"...SACக்கு தனது பாணியில் வாழ்த்துக்கள் கூறிய பார்த்திபன்!

  |

  சென்னை : சமூகவலைத்தளத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது, பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் புது யூடியூப் சேனல் தொடங்கியதை பற்றித்தான்.

  இவர் புது யூடியூப் சேனலை தொடங்கிய சில நாட்களிலேயே பல சினிமா பிரபலங்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

  SAC வெளியிட்ட முதல் வீடியோவை பார்த்த பலரும் விஜய்யை பற்றி ஏதாவது புதிய தகவல்களை கூறுவாரா? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  பிளாட்ஃபார்முக்கு வந்த எஸ்.ஏ. சந்திரசேகர்.. வெற்றி போதை கண்ணை மறைச்சிடுமாம்.. யாருக்கு சொல்றாரு?பிளாட்ஃபார்முக்கு வந்த எஸ்.ஏ. சந்திரசேகர்.. வெற்றி போதை கண்ணை மறைச்சிடுமாம்.. யாருக்கு சொல்றாரு?

   வலியும், வேதனையும்

  வலியும், வேதனையும்

  பிரபல இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் "யார் இந்த எஸ்ஏசி" என்ற புது யூடியூப் சேனலை துவங்கியுள்ளார்.பல சினிமா பிரபலங்களும் யூடியூப் சேனலை துவங்கி வரும் வேளையில், சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய விஜய்யின் தந்தை யூடியூப் சேனலை துவங்கி இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த சேனல் மூலம் சினிமாவிற்கு தான் வருவதற்கு முன் பட்ட கஷ்டங்களையும், வேதனைகளையும் மட்டும் இல்லாமல் எப்படி தனது வெற்றிப் பாதையை தேர்ந்தெடுத்தார், எப்படி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பதை கூறி வருகிறார் SAC. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பல சினிமா நட்சத்திரங்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

   பெருகும் ஆதரவு

  பெருகும் ஆதரவு

  சமீபத்தில் இவர் வெளியிட்ட பிளாட் ஃபார்மில் எஸ்ஏசி என்ற வீடியோ மிகவும் பிரபலமாகியுள்ளது. அதற்குக் காரணம் சினிமாவிற்கு வருவதற்கு முன் அந்த பிளாட்பாரத்தில் தான் 47 நாட்கள் தங்கியிருந்ததாகவும், கூறிய SAC தனது ஒவ்வொரு அனுபவத்தையும், வலியையும் பகிர்ந்து கொண்டார். மிகவும் பிரபலமான இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இவ்வாறு பாயை விரித்து நடுரோட்டில் உட்கார்ந்து அவர் சொன்ன கதையை கேட்ட பல ரசிகர்களும் தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர். இவரது விடியோக்கள் மெதுவாக சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. விரைவில் ஏகப்பட்ட சப்ஸ்க்ரைபர்ஸ் வந்து விடுவார்கள் என்பதை உணர்ந்து பக்காவாக பிளான் செய்து ஒவ்வொரு விடியோவையும் வெளியிடுகிறார் .

   உச்சம் தொட்ட கதை

  உச்சம் தொட்ட கதை

  மேலும் எஸ் ஏ சந்திரசேகர் இந்த வீடியோவை துவங்குவதற்கு முன்பே, இதில் வரும் வீடியோக்கள் அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல என்றும், தன்னுடைய சொந்த வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை பற்றி அனைவருக்கும் தெளிவுபடுத்துவதே இந்த யூடியூப் சேனலின் நோக்கம் என்று கூறியிருந்தார். இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு உண்மையான உழைப்பு உச்சம் தொட்ட கதை, வாழ்த்துக்கள் சார், இன்னும் வெல்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

  Recommended Video

  'மகன் விஜய்க்காக பட்ட சிரமம்'- SA Chandrasekhar | Part 4 | Filmibeat Tamil
   Plat

  Plat"form" லிருந்து great "form"

  இயக்குனரும், நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் "Plat"form" லிருந்து great "form"க்கு திரு எஸ்ஏசி வந்து, திரைக்கு அடுத்த சூப்பர் ஸ்டாரை தந்து, பின்னோக்கி திரும்பிப் பார்க்க அத்தனையும் ஆச்சரியம்! கற்க நிறைய அதை ஒரு சுவாரசிய திரைப்படம் போல் அவரே சொல்கிறார் பாருங்கள்!" என்று பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். நடிகை ராதிகா சரத்குமார், இயக்குனர் மற்றும் நடிகரான வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி போன்ற பல பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்தும் SACயின் யூடியூப் லிங்கை ஷேர் செய்தும் வருகின்றனர். இந்த சேனலின் அடுத்த வீடியோ எபிசோட் 2 - வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதற்காக அடுத்த கட்ட ப்ரோமோ,அடுத்த ஸ்பாட், லொகேஷன்,டைமிங் என்று மனுஷன் படு பிசியாக இயங்கி கொண்டு இருக்கிறார். வரும் காலங்களில் நிறைய கன்டென்ட் கொடுக்க போகிறார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

  English summary
  Platform to Great Form – Actor Parthiban Praises SA Chandrasekar
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X