’வசீகரா’ பாடல் புகழ் பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவா?.. லண்டனில் அறுவை சிகிச்சை?
லண்டன்: வசீகரா பாடல் பாடி ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மூளையில் ஏற்பட்டிருக்கும் ரத்தக்கசிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கொல்கத்தாவில் பிறந்து பள்ளி, கல்லூரி படிப்புகளை மும்பையில் முடித்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. அதன் பிறகு அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர தனது தாய் மற்றும் தந்தையிடம் இசையை கற்றுக்கொண்டார். அதன் பிறகு டி.ஆர்.பாலாமணியிடமும், லால்குடி ஜெயராமனிடமும் இசையை கற்றுக்கொண்டார்.

சங்கீத கலாநிதி விருது
சென்னை மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை உலகில் பெருமைமிக்க விருதாக மதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த விருதுக்கு பாம்பே ஜெயஸ்ரீ கடந்த திங்கள் கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

மூளையில் ரத்தக் கசிவு - மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் கச்சேரி செய்வதர்காக லண்டன் சென்றிருந்தார் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் யோகோ ஓனோ லினன் சென்ட்டரில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளை சாவு அடைந்திருப்பதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துவருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.

பின்னணி பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ
முன்னதாக, 1982ஆம் ஆண்டிலிருந்து கச்சேரிகள் செய்ய ஆரம்பித்த பாம்பே ஜெயஸ்ரீ முதல்முறையாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான தம்பதிகள் படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இளையராஜா இசையில் அவர் பாடிய முதல் பாடல் 1994ஆம் ஆண்டு வெளியான வியட்நாம் காலனி படத்தில் இடம்பெற்ற கையில் வீணை ஏந்தும் பாடல் ஆகும்.

ஏ.ஆர்.ரஹாம்னுடன் பாம்பே ஜெயஸ்ரீ
எம்.எஸ்.வி, இளையராஜா என்ற இரு இசை ஜாம்பவான்களுடன் ஆரம்பத்திலேயே பணியாற்ற ஆரம்பித்த பாம்பே ஜெயஸ்ரீ, ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதல்முறையாக இருவர் படத்தில் இணைந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற நறுமுகையே நறுமுகையே பாடல் அவருடைய குரலால் அடுத்த தளத்திற்கு சென்றது. தொடந்து ரஹ்மானுடன் பணியாற்றினார் பாம்பே ஜெயஸ்ரீ.

ஆல் டைம் ஃபேவரைட் வசீகரா
பாம்பே ஜெயஸ்ரீ இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இசையி ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் அவரை தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடல். ஜெயஸ்ரீ எப்போது மேடை ஏறினாலும் அந்தப் பாடலை பாடாமல் மேடையிலிருந்து இறங்கியதில்லை.

ஹாரிஸுடன் சேர்ந்து செய்த மேஜிக்
அந்தப் பாடல் மட்டுமின்றி ஹாரிஸின் இசையில் அவர் பாடிய, முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய், ஒன்றா ரெண்டா ஆசைகள், சுட்டும் விழி சுடரே, உயிரே என் உயிரே, பார்த்த முதல் நாளே, உனக்குள் நானே, யாரோ மனதிலே, செல்லமே செல்லம் என அவர் பாடிய பாடல்கள் அனைத்திலும் தனது குரலில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











