அவரு மேல பாலியல் புகார் இருக்கு.. அவருக்கு மரியாதை.. நான் சர்ச்சைக்குரியவளா.. பிரபல பாடகி ஆவேசம்!

சென்னை: பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என பக்கம் பக்கமாக அறிக்கை விட்டு விளாசியுள்ளார் பாடகி சின்மயி.

சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்தும் பல விதமான தகவல்கள் பரவி வருகின்றன.

இவர்கள்தான் இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லப் போகிறார்கள் என நாள்தோறும் ஒரு பட்டியல் வெளியாகி வருகிறது.

சின்மயி மறுப்பு

சின்மயி மறுப்பு

அந்த வகையில் யூ டியூப் சேனல் ஒன்றில், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பாடகி சின்மயி பங்கேற்கபோவதாக செய்தி வெளியானது. அதனை மறுத்துள்ள பாடகி சின்மயி, அந்த யூ டியூப் சேனலையும் கடுமையாக விளாசியுள்ளார். இதுதொடர்பாக பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

வனிதாவுக்கு முன்

வனிதாவுக்கு முன்

அதில் சின்மயி தன்னை ‘மீ டூ இயக்கம் காரணமாக சர்ச்சைக்குரியவர்' என்று குறிப்பிட்டதற்காக கடுமையாக சாடியுள்ளார். ‘பிக் பாஸின் ஷார்ட்லிஸ்ட் பெயர்களில் ஒரு யூடியூப் சேனல் பெயரைக் கண்டேன். அவர்கள் என்னைக் குறிப்பிட்ட விதம் மட்டுமே ‘வனிதாவுக்கு முன்பு, சின்மயிதான் மீடூ இயக்கம் காரணமாக சர்ச்சைக்குரியவராக இருந்தார்.

உலகின் நக்கீரன்கள்

உலகின் நக்கீரன்கள்

அந்த வாய்ஸ் ஓவர் ஒரு ஆணின் குரலில் இருந்தது. அது யாராக இருந்தாலும் சரி. பெரிய யுத்தம், யூடியூப் சேனல்களை இயக்கும் அல்லது உலகின் நக்கீரன்களின் ஒரு பகுதியாக இருக்கும் இவர்களுக்கு மூளை இல்லை, அல்லது சர்ச்சைக்குரியது மற்றும் விழிப்புணர்வை உருவாக்குவது பற்றிய புத்தி அல்லது புரிதல் இல்லை.

அவருக்கு மரியாதை

அவருக்கு மரியாதை

மிகவும் சுவாரஸ்யமாக அந்த வீடியோ வீட்டுக்கு பெரியவர் ராதா ரவி ‘அவர்கள்' என்று தொடங்குகிறது. ‘வெளிப்படையாகத் தவறாக பேசும் ராதாரவி கூட மரியாதை பெறுகிறார்; அந்த நபர் டப்பிங் யூனியன் பணத்தை மோசடி செய்துள்ளார். அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் சார் என்பது சார்.

ஒருபோதும் பங்கேற்க மாட்டேன்

ஒருபோதும் பங்கேற்க மாட்டேன்

மேலும் நான் சர்ச்சைக்குரியவர் என்று குறிப்பிடப்படுகிறேன். பிரதான ஊடகங்கள் இது போன்ற மனிதர்களால் உருவாக்கப்படும்போது ஒருவர் என்ன செய்வார்? ஒருவர் எவ்வளவு கல்வி கற்பார்? பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். எல்லா வீடியோக்களும் / கட்டுரைகளும் எனது பெயரை விளம்பரம் செய்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்துகின்றன. இல்லையெனில் அவர்களை வேறு யாருக்கும் தெரியாது ' இவ்வாறு பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X