twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவரு கேக்குறது வேற ஸ்டைல் மன்னிப்பு.. அதுக்கு நான் ஆளில்ல.. ராதாரவியை விளாசிய பிரபல பாடகி!

    |

    Recommended Video

    Chinmayi Dubbing Union Press Meet 2020 | Radha Ravi

    சென்னை: நடிகர் ராதாரவி கேட்கும் ஸ்டைலில் எல்லாம் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது, அதுக்கு நான் ஆளும் இல்லை என்று பிரபல பாடகியான சின்மயி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

    நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும் பிரச்சனை இருந்து வருகிறது. டப்பிங் கலைஞர் சங்க தலைவராக 2018ஆம் ஆண்டு முதல் நடிகர் ராதாரவி இருந்து வருகிறார்.

    இதில் பாடகி சின்மயியும் உறுப்பினராக உள்ளார். இவர் ஏராளமான படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் கொடுத்தார் சின்மயி.

    டப்பிங் கலைஞர்கள்

    டப்பிங் கலைஞர்கள்

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்து குறித்து மீடூவில் புகார் அளித்ததால் டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் பிரபல பாடகியான சின்மயி. டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் ராதாரவி வெற்றி பெற்றார். அப்போது முதல் அவரே தலைவராக இருந்து வருகிறார்.

    தலைவராக தேர்வு

    தலைவராக தேர்வு

    இந்நிலையில் சங்க நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் முடிவதால் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் 'டப்பிங் யூனியன் தேர்தல்' ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரவி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏற்கனவே தலைவர் பதவிக்கு போட்டியின்றி நடிகர் ராதாரவி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

    மற்ற பதவிகளுக்கு தேர்தல்

    மற்ற பதவிகளுக்கு தேர்தல்

    அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சின்மயி யூனியனில் உறுப்பினராக இல்லை என்றுக் கூறி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி ஏற்கன போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    மன்னிப்பு கேட்கனும்

    மன்னிப்பு கேட்கனும்

    தேர்தலில் ஓட்டு போட்ட நடிகர் ராதாரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டப்பிங் யூனியன் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளேன். யூனியன் நலனுக்காக நலத்திட்ட உதவிகளை செய்ய இருக்கிறேன். சின்மயி மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் சேர்ப்போம்.

    விளம்பரப் பிரியர்

    விளம்பரப் பிரியர்

    அவர், எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை தெரிவித்ததால், சின்மயி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார். சின்மயி விளம்பரப் பிரியராக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து அவதூறு பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

    உறுப்பினர் இல்லை

    உறுப்பினர் இல்லை

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாடகி சின்மயி டப்பிங் சங்க யூனியனில் உறுப்பினராவதற்காக 15,000 செலுத்தி சேர்ந்ததாக கூறியுள்ளார். 2500 ரூபாய் செலுத்தினாலே உறுப்பினராகி விடலாம், ஆனால் 15000 பெற்றுக்கொண்டு தற்போது தன்னை யூனியன் உறுப்பினர் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

    காலில் விழ முடியாது

    காலில் விழ முடியாது

    மேலும் இந்த பிரச்சினையை சட்டரீதியாக எதிர் கொள்ளப்போவதாக தெரிவித்த சின்மயி, ராதாரவி காலில் விழுந்தோ அல்லது அவரது வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது. அவர் வீட்டிற்கு சென்று வேற ஸ்டைலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என விரும்புகிறார். அதற்கு நான் ஆளில்லை என்றும் தடாலடியாக தெரிவித்துள்ளார்.

    English summary
    Play back singer Chimayi says I am not ready to ask appologise Radharavi. He wants me to ask appology in some other style, I am not a person for that, she said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X