போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது.. பாலியல் குற்றங்களால் பிரபல பாடகி வேதனை!
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பால் பிரபல பாடகி நொந்துபோயுள்ளார்.
Recommended Video
கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் துணிச்சலாக புகார் அளித்தார் சின்மயி. இதன் மூலம் பல சர்ச்சைகளுக்கும் ஆளானார்.
சிலர் சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்த போதும் பலர், சின்மயியை திட்டி தீர்த்தனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.

7 வயது சிறுமி
இருப்பினும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமிக்கு நீதிக் கேட்டு டிவிட்டியிருந்தார்.

சகோதரர்களால் பலாத்காரம்
அதனை தொடர்ந்து இளம் பெண் குளிப்பதை இரண்டு சகோதரர்கள் படமெடுத்து மிரட்டி 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சசிகலா என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்தும் டிவிட்டியிருந்தார் சின்மயி.

போதும்டா சாமி..
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதால் நொந்து போன சின்மயி, #JusticeForSasikala என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது என வேதனையுடன் டிவிட்டியுள்ளார்.

கொன்னுருவாய்ங்க..
அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் உங்களை போன்ற தைரியசாலிகள் உருவாக வேண்டும் என பதில் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த நடிகை சின்மயி, உருவாகுறதுக்குள்ள கொன்னுருவாங்க என விரக்தியுடன் பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











