twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னும் ஆறாத ரணமாக உள்ளது.. மிஸ் யூ நந்தனா.. மகளின் மரணத்தில் இருந்து மீளாத சித்ரா உருக்கம்!

    |

    சென்னை: பிரபல பின்னணி பாடகி சித்ரா தனது மகளின் நினைவு நாளில் தனது வலியை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

    பிரபல பின்னணி பாடகி சித்ரா கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, இந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி என பல மொழிகளில் பாடல்களை பாடியிருக்கிறார்.

    இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் சித்ரா. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பாடி வரும் சித்ரா ஏராளமான கவுரவங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

    பிரபுதேவா டாட்டூவுக்கு பட்டி டின்கரிங் பார்த்த நயன்தாரா.. ஆனாலும், அந்த எழுத்து அப்படியே இருக்கு!

    பத்மஸ்ரீ விருது

    பத்மஸ்ரீ விருது

    அவரது இனிமையான குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. இதுவரை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 6 முறை பெற்றிருக்கிறார் சித்ரா. ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளையும் குவித்துள்ளார். இசைக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி மத்திய அரசு சித்ராவுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.

    துபாய் நிகழ்ச்சி..

    துபாய் நிகழ்ச்சி..

    இந்நிலையில் சித்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் மறைந்த தனது மகளின் நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சித்ரா சினிமாவில் பாடுவதோடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். அவ்வாறு கடந்த 2011ஆம் ஆண்டு சித்ரா துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

    மகள் உயிரிழப்பு

    மகள் உயிரிழப்பு

    அப்போது சித்ராவின் மகள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சித்ராவின் குழந்தை இறந்த சம்பவம் திரைத்துறையினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. இந்நிலையில் 14ஆம் தேதி தனது மகளின் நினைவு நாளை முன்னிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த திங்கள் கிழமை ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார்.

    காலம் சிறந்த மருந்து

    காலம் சிறந்த மருந்து

    அதில் ஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் முடிந்த பின் நித்திய உலகத்துக்குச் செல்வோம் என்று மக்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    காலம் சிறந்த மருந்து என்றும் சொல்வார்கள். ஆனால், அந்த கஷ்டத்தை கடந்து வந்த மக்களுக்குத் தான் தெரியும் அது உண்மையில்லை என்று.

    மிஸ் யூ நந்தனா

    என்னுடைய காயம் இன்னும் அப்படியே வலியுடன் ரணமாக உள்ளது. உன்னை மிஸ் செய்கிறேன் நந்தனா என பதிவிட்டுள்ளார் சித்ரா. தனது மகளின் போட்டோவுடன் சித்ரா போஸ்ட் செய்திருக்கும் இந்த பதிவு காண்போரை கலங்கச் செய்துள்ளது. மேலும் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Play back singer Chithra emotional post about her daughter goes viral. Chithra daughtor passed away in 2011.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X