என்ன பாட்டுங்க அது.. சமந்தாவின் பாடலை வறுத்தெடுத்த பிரபல பாடகி எல்.ஆர். ஈஸ்வரி

சென்னை: பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியிருந்தார்.

சென்சேஷ்னல் ஆன ஊ சொல்றியா மாமா

சென்சேஷ்னல் ஆன ஊ சொல்றியா மாமா

தனது திருமண வாழ்க்கையின் முறிவுக்கு பிறகு புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஊ சொல்றியா மாமா என்று தொடங்கும் அந்தப் பாடலும் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடினார். அதுவரை இல்லாத அளவுக்கு அந்தப் பாடலில் சமந்தாவின் கவர்ச்சி இருந்தது. தமிழில் நடிகை ஆண்ட்ரியா பாடலை பாட, பாடலாசிரியர் விவேகா எழுதியிருந்தார். புஷ்பா படம் எந்த அளவுக்கு ஹிட்டானதோ அதே அளவு இந்தப் பாடலும் மிகப்பெரிய ஹிட்டானது.

ஊ சொல்றியா பாடலை விமர்சித்த எல்.ஆர். ஈஸ்வரி

ஊ சொல்றியா பாடலை விமர்சித்த எல்.ஆர். ஈஸ்வரி

இந்நிலையில் மூத்த பின்னணி பாடகியான எல்.ஆர். ஈஸ்வரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஊ சொல்றியா மாமா பாடலை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அந்தப் பேட்டியில் பேசிய அவர், "புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை சமீபத்தில் கேட்டேன். அதெல்லாம் ஒரு பாடலா? தொடக்கத்தில் இருந்து கடைசிவரை ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது.

இசையமைப்பாளருக்கு எல்.ஆர்.ஈஸ்வரி சொன்ன அறிவுரை

இசையமைப்பாளருக்கு எல்.ஆர்.ஈஸ்வரி சொன்ன அறிவுரை

இசையமைப்பாளர் இதையெல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். பாடகர்களுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. இசையமைப்பாளர் சொல்லும்படி அவர்கள் பாடவும் செய்துவிடுவார்கள். அந்தப் பாடல் என்னிடம் வந்திருந்தால் அதற்குரிய கலரே வேறு மாதிரியாக இருந்திருக்கும். நாங்கள் மிகவும் சின்சியராக வேலை செய்தோம். அதனால்தான் அப்போது நாங்கள் பாடிய பாடல்கள் இப்போதும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது" என்றார்.

பாடல் பதிவிலிருந்து எல்.ஆர். ஈஸ்வரியை வெளியே அனுப்பிய ரெக்கார்டிஸ்ட்

பாடல் பதிவிலிருந்து எல்.ஆர். ஈஸ்வரியை வெளியே அனுப்பிய ரெக்கார்டிஸ்ட்

சினிமா உலகில் நான் நுழைந்த ஆரம்பத்தில் கோரஸ் பாடல்கள்தான் பாடிக்கொண்டிருந்தேன். ஸ்வர்ண சுந்தரி படத்தில் பிலுவகுரா என்ற பாடலுக்கு கோரஸ் பாட சென்றேன்.அப்போது எனது குரல் சரியாக இல்லை என கூறி என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுத நான் ஒருகட்டத்தில் விடா முயற்சியால் சினிமாவில் பாட ஆரம்பித்தேன். நான் பெரிய பாடகி ஆன பிறகு எந்த ரெக்கார்டிஸ்ட் என்னை வெளியே அனுப்பினாரோ அவரே எனது பாடலை ரெக்கார்ட் செய்தார்" என்றார்.

எவர்க்ரீன் பாடகி எல்.ஆர். ஈஸ்வரியின்

எவர்க்ரீன் பாடகி எல்.ஆர். ஈஸ்வரியின்

எல்.ஆர். ஈஸ்வரி 1958ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் பின்னணி பாடகியாக இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கும், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடியிருக்கிறார்.ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கும் இவர் சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார். சில வருடங்கள் ஓய்வில் இருந்த ஈஸ்வரி, சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் இடம்பெற்றிருந்த கலாசலா பாடலை டி.ஆருடன் இணைந்து பாடியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X