SP Balasubramaniam: சித்ரா அப்பாவி பொண்ணு.. பாராட்டு பத்திரம் வாசித்த எஸ்பிபி!

சென்னை: பின்னணி பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

பாடும் நிலா பாலு என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் எஸ்பிபி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

கடந்த 2020ம் ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த எஸ்பிபியின் நினைவுதினம் இன்று. இதையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் என அவரை சமூக வலைதளங்கள்மூலமாக நினைவு கூர்ந்து வருகின்றனர்.

Play back singer late SPB hails Singer Chitra throwback Video attracts fans

பாடகி சித்ராவிற்கு பாராட்டு தெரிவித்த எஸ்பிபி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் ஏறக்குறைய 40 ஆயிரம் பாடல்களை பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம். பாடும் நிலா பாலு என்ற ரசிர்களால் கொண்டாடப்பட்ட இவர் கடந்த 2020ம் ஆண்டில் செப்டம்பர் 25ம் தேதி உயிரிழந்தார். இன்றைய தினம் இவரது நினைவு தினத்தையொட்டி ஏராளமான பிரபலங்கள், ரசிகர்கள் என பலதரப்பினரும் எஸ்பிபியை நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.

பின்னணி பாடகராக அறிமுகமான போதிலும் அத்துடன் தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொள்ளவில்லை எஸ்பிபி. நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளை அவர் வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினரையும் கவர்ந்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான கேளடி கண்மணி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப் படைப்புகளாக மாறியுள்ளன. கல்லூரி காலகட்டத்திலேயே இசைமீது கொண்ட ஆர்வம் காரணமாக பல போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் எஸ்பிபி.

சரியான இசை பின்னணி இல்லாமலேயே அதிகமான பாடல்களை உணர்வுப்பூர்வமாக ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தவர் எஸ்பிபி. இளையராஜா, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான இசையமைப்பாளர்களின் இசைக்கு வலு சேர்த்த எஸ்பிபி, பல இசை நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும் பாடியுள்ளார். பல டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று சிறப்பித்துள்ளார். அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்பிபி, பின்னணி பாடகி சித்ரா குறித்து பேசியது தற்போது ரசிகர்களிடைய அதிகமான பகிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Play back singer late SPB hails Singer Chitra throwback Video attracts fans

அந்த நிகழ்ச்சியில் ஆங்கர் பிரியங்காவின் கேள்விக்கு பதிலளித்து பேசிய எஸ்பிபி, சித்ரா மிகவும் அப்பாவி என்று கூறியிருந்தார். ஸ்டேஜில்கூட பாடும் போட்டியாளர்களின் குறையைகூட மிகவும் நாசுக்காகத்தான் சித்ரா கூறுவார் என்றும் எஸ்பிபி பாராட்டியிருந்தார். குறிப்பிட்ட சங்கதியில் பாடகர்கள் தவறவிட்ட சில விஷயங்களையும் மிகவும் அமைதியாக அவர்களுக்கு புரியும்வகையில் சித்ரா வெளிப்படுத்துவார் என்று எஸ்பிபி அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இன்று எஸ்பிபியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரால் கொடுக்கப்பட்ட காலத்தால் அழியாத பாடல்களை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். எஸ்பிபி குரலில் வெளியான பக்திப்பாடல்களுக்கு உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் மிகப்பெரிய கலைஞனை இந்திய திரையுலகம் இழந்து வாடி வருகிறது. அவரது இடம் இன்னும் நிரப்பப்படாமல்தான் உள்ளது என்பதே ரசிர்களின் குமுறலாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X