அரைகுறை உடையில் காருக்குள் கெட்ட ஆட்டம் போட்ட பாடகி.. ரசிகர்கள் அதிருப்தியால் வீடியோவை நீக்கினார்!
சென்னை: பிரபல பாடகி காருக்குள்ளே செம ஆட்டம் போடும் வீடியோவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் வீடியோவை நீக்கியுள்ளார்.
Recommended Video
பிரபல பாடகியான நேகா காக்கர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சில படங்களிலும் நடித்துள்ள நேகா காக்கர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
அதோடு இந்தியன் ஐடால் உட்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் பாடகி நேகா காக்கர்.

லாக்டவுன் நேரத்தில்
இன்ஸ்டாகிராமில் மட்டும் பாடகி நேகாவை 44 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். நடிகைகளைப் போலவே இந்த லாக்டவுன் நேரத்தில் நேகாவும் சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வந்தார்.

காருக்குள் ஆட்டம்
நேகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் அவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் போட்டோவும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாடகி நேகா காக்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காருக்குள் அமர்ந்தப்படியே செம ஆட்டம் போடும் வீடியோவை ஷேர் செய்தார்.

எதிர்மறை கமெண்ட்ஸ்
கவர்ச்சியான பச்சை நிற உடையில் அவர் போடும் கெட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், அதிருப்தி தெரிவிக்கும் வகையில் எதிர்மறையான கமெண்ட்டுகளை குவித்தனர். மேலும் சிலர் ஃபுல் போதையா என்றும் கமெண்டுகளால் துளைத்தெடுத்தனர்.

35 லட்சம் வியூஸ்
அவரது ஆட்டம் குறித்த வீடியோக்கள் ஊடங்களிலும் ஒளிபரப்பானது. இதனால் அதிர்ச்சியடைந்த பாடகி வீடியோவை நீக்கியுள்ளார். நேகா காக்கர் வெளியிட்ட அந்த வீடியோ இன்ஸ்டாவில் ஷேர் செய்யப்பட்ட 5 மணி நேரத்திற்குள் 35 லட்சம் வியூஸ்களை குவித்தது.

பெரும் எதிர்ப்பு
நேகா காக்கரின் இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அந்த வீடியோவை தற்போது ஷேர் செய்திருந்தார். ஆனால் அந்த அப்போதைக் காட்டிலும் இப்போது பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











