பாடகராக அறிமுகப்படுத்தியவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் இயக்குநர் மணிரத்னம்!

சென்னை: இயக்குநர் மணிரத்னத்தால் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்ட சித் ஸ்ரீராம் தற்போது அவராலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னத்திற்கு என தனி இடம் உண்டு. ஏராளமான வெற்றி படங்களையும் காதல் படங்களையும் கொடுத்து அசத்தி வருபவர் மணிரத்னம்.

இயக்குநரான மணிரத்னம் வானம் கொட்டட்டும் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நடிகர் விக்ரம்பிரபு ஹீரோவாகவும் மடோனா செபாஸ்டியன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கோவிந்த் வசந்தா

கோவிந்த் வசந்தா

வானம் கொட்டட்டும் படத்தின் கதை மற்றும் வசனத்தை, படைவீரன் பட இயக்குநர் தானா உடன் சேர்ந்து மணிரத்னமும் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்

சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்

இந்நிலையில் அவர் பல படங்களில் பிஸியாக உள்ளதால் வானம் கொட்டட்டும் படத்தில் இருந்து விலகியுள்ளார். இதைதொடர்ந்து சித் ஸ்ரீராம் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சித் ஸ்ரீராம் மணிரத்னத்தின் கடல் படத்தில் ஒரு பாடலை பாடி தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.

பல பாடல்களை பாடியிருக்கிறார்

பல பாடல்களை பாடியிருக்கிறார்

இந்நிலையில் மணிரத்னத்தின் படத்தின் மூலமே சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். சித் ஸ்ரீராம் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

பிலிம் பேர் விருது

பிலிம் பேர் விருது

ஏஆர் ரஹ்மான் இசையில் கடல் படத்தில் அடியே என்ற பாடல் ஐ படத்தில் என்னோடு நீ இருந்தால் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். சித் ஸ்ரீராம் என்னோடு நீ இருந்தால் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X