மைல்டு கொரோனா.. மருத்துவமனையில் உள்ளேன்.. யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்.. வீடியோ வெளியிட்ட எஸ்பிபி!

சென்னை: பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

TALKING 2 MUCH EP-09 | SPB SHORTFILM ENTRY ! | FILMIBEAT TAMIL

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதோடு ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளையும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார் எஸ் பி பாலசுப்பிரமணியன்.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

அதுமட்டுமின்றி நாட்டின் மிக உயரிய விருதுகளான மத்திய அரசின் பத்மஸ்ரீ, பம்பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எஸ்பிபிக்கு சிகிச்சை

எஸ்பிபிக்கு சிகிச்சை

இதனை தொடர்ந்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு மைல்டு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

மைல்டு கொரோனா

மைல்டு கொரோனா

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் எஸ்பி பாலசுப்பிரமணியம். அதில் தனக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கடந்த 3 நாட்களாக இருந்ததாக கூறியுள்ளார். மருத்துவமனையிலும் மைல்ட் கொரோனா என உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் உள்ளேன்

மருத்துவமனையில் உள்ளேன்

மேலும் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன். இங்கு என்னுடைய நண்பர்கள் இருக்கிறார்கள். மருத்துவமனையிலும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.

கவலைப்பட வேண்டாம்

கவலைப்பட வேண்டாம்

நான் நல்ல உடல் நலத்தோடு நலமாக இருக்கிறேன். கோல்டு மட்டும்தான் உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன். யாரும் என்னுடைய உடல் நிலையை பற்றி கவலைப்பட வேண்டாம்.

எஸ்பிபி வேண்டுகோள்

எஸ்பிபி வேண்டுகோள்

யாரும் என்னுடைய உடல் நிலை குறித்து விசாரிக்க தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸில் இருந்து காத்துக் கொள்ளும் வகையில் இந்த லாக்டவுன் நேரத்தில் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை பாடினார் எஸ்பிபி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X