போதையில் விஜய் வீட்டு முன் டான்ஸ் ஆடினாராம் திரிஷா.. சுசித்ரா கிளப்பிய புயல்.. என்னென்னமோ சொல்றாங்க
சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிவருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் குறித்து சரமாரி குற்றச்சாட்டுக்களை வைத்துவரும் சுசித்ரா திரிஷாவையும் விட்டுவைக்கவில்லை. அவர் முதலில் திரிஷா மீது குற்றச்சாட்டை வைத்த சூழலில் இப்போது அளித்திருக்கும் இன்னொரு பேட்டியில் மேலும் ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார். அது மேற்கொண்டு புது புயல் ஒன்றை கோலிவுட்டில் கிளப்பியிருக்கிறது.
வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. முக்கியமாக பின்னணி பாடகியாக வெகு பிரபலமானவர் சுசித்ரா. மங்காத்தாவில் இடம்பெற்ற வாடா பின்லேடா உள்ளிட்ட பல பாடல்களை பாடிய சுசித்ரா கடந்த 2016ஆம் ஆண்டு தலைப்பு செய்தியாக மாறினார். அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்து: அவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதற்கு பிறகு சுசித்ராவை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துகொண்டு இப்போது இன்னொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார் சுசித்ரா.
சுசித்ராவின் பேட்டி: கிட்டத்தட்ட 8 வருடங்கள்வரை எங்கிருந்தார் என்று தெரியாத சுசித்ரா இப்போது மீண்டும் பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் சுச்சி லீக்ஸ் என்பதே தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் செய்த பிராங்க்தான். முக்கியமாக அந்தப் புகைப்படங்களை திரிஷாதான் வெளியிட்டார் என்று சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.
திரிஷாவின் பதிலடி: மேலும் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறையில் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா, "நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் மற்றொரு யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா அளித்த பேட்டியில் திரிஷா குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் சுசித்ரா.
சுசித்ராவின் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "எலைட் வட்ட மக்கள் தங்களுக்கு ஒருவரையொருவர் பிராங்க் செய்துகொள்வார்கள். அது மிகப்பெரிய வினையில் சென்று முடிந்திருக்கிறது. ஒருமுறை ஒரு பார்ட்டியின்போது திரிஷா விஜய் வீட்டு முன் நின்று பாடல் பாடி நடனம் ஆடியது ஒரு Dare. பார்ட்டியின்போது திரிஷாவிடம் எந்த மாதிரியான Dare கொடுத்தாலும் அவர் பண்ணிவிடுவார். இந்த மாதிரியான பார்ட்டி பல காலமாக நடந்து வந்திருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேட்டி கோலிவுட்டில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது.
முன்னதாக கமல் ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டி என்றாலே வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் தருவார்கள் என்றும்; தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் நாலு லைன் கொக்கைன் அடித்துவிட்டுத்தான் மேடை ஏறி ஸ்டாண்ட் அப் காமெடி செய்வார் என்றும் சுசித்ரா தான் அளித்த முதல் பேட்டியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பட்டியலின மக்களை கார்த்திக் குமார் இழிவாக பேசினார் என்று ஒரு ஆடியோ வெளியானதும்; அதில் இடம்பெற்றிருந்தது தனது குரல் இல்லை என்று கார்த்திக் விளக்கமளித்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











