Suchitra - பர்த் டே பார்ட்டியா?.. வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன்தான்.. கமல் ஹாசன் பற்றி பகீர் கிளப்பிய பாடகி

சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்ட அவர் பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். அதற்கு காரணம் சுச்சி லீக்ஸ் என்று கூறப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில்; இப்போது தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சுசித்ரா அளித்த பேட்டி மீண்டும் புயலை கிளப்பியிருக்கிறது.

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றியவர் சுசித்ரா. பிறகு சினிமாவில் பின்னணி பாடகியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது குரலால் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பாடல்களை பாடியிருக்கிறார். பின்னணி பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சினிமாவில் பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார் சுசித்ரா.

Play Back Singer Suchitra Opens up About Kamal Haasan Birthday Party

திருமணம்: தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் வீட்டால் நிச்சயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்குமான திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் சுச்சி லீக்ஸ் என்று சொல்லப்படுகிறது.

சுச்சி லீக்ஸ்: கடந்த 2016ஆம் ஆண்டு கோலிவுட்டில் பெரும் புயல் அடித்தது. அதாவது சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வரிசையாக வெளியாகின. தனுஷும், திரிஷாவும் ஒன்றாக இருந்தது, நிக்கி கல்ரானி, அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோரின் அந்தரங்கள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பின. அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொரு நாளாக வெளியாகின. ஆனால் தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறினார். மேலும் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டதாக கார்த்திக் குமார் கூறினார்.

சுசித்ரா பேட்டி: நிலைமை இப்படி இருக்க அந்த விவகாரத்துக்கு பிறகு கார்த்திக்கும், சுசித்ராவும் பிரிந்துவிட்டார்கள். மேலும் சுசித்ரா ஆளே காணவில்லை. இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு காரணமே தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர்தான். அதில் என்னை வேண்டுமென்றே மாட்டிவிட்டார்கள் என சொல்லி ஏகப்பட்ட தகவல்களை கூறினார். மேலும் தனது முன்னாள் கணவர் கார்த்தி தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறைக்குள் சென்றார்கள் என்றும் கூறியிருந்தார்.

கமல் பற்றி சுசித்ரா: அந்தப் பேட்டியில் கமல் ஹாசனின் பர்த் டே பார்ட்டி குறித்தும் பேசியிருக்கிறார் சுசித்ரா. அவர் பேசுகையில், "எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஸ்டேஜ் ஏறினாலே நாலு லைன் கொக்கைன் அடித்துவிட்டுத்தான் வருவார். கமல் ஹாசனின் பர்த் டே பார்ட்டியில் வெள்ளி தாம்பூலத்தில் வைத்து கொக்கைனை கொண்டு வருவார்கள். அது வேண்டாம் என்று நான் சொன்னதால்தான் என்னை வைத்து செய்கிறார்கள். கோலிவுட்டில் போதை கலாசாரம் சர்வசாதாரணமாக இருக்கிறது" என்று கூறி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.

திரிஷா பதிலடி: முக்கியமாக சினிமாவில் தவிர்க்க முடியாத கமல் ஹாசன் தனது பர்த் டே பார்ட்டியில் போதை பொருள் கொடுக்கிறாரா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர். முன்னதாக சுச்சி லீக்ஸில் வெளியான புகைப்படங்களை திரிஷாதான் தனக்கு கொடுத்ததாக சுசித்ரா கூறியதற்கு பதிலடி கொடுத்த திரிஷா, 'நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X