சுசித்ராவின் இரண்டாவது கணவர் யார் தெரியுமா?.. எப்படி காதல் மலர்ந்தது தெரியுமா?
சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிவருகிறார். தனுஷ், ஐஸ்வர்யா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் குறித்து சரமாரி குற்றச்சாட்டுக்களை வைத்துவரும் சுசித்ரா திரிஷாவையும் விட்டுவைக்கவில்லை. அவர் முதலில் திரிஷா மீது குற்றச்சாட்டை வைத்த சூழலில் இப்போது அளித்திருக்கும் இன்னொரு பேட்டியில் தனது இரண்டாவது கணவர் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. முக்கியமாக பின்னணி பாடகியாக வெகு பிரபலமானவர் சுசித்ரா. ஜேஜே படத்தில் இடம்பெற்ற மே மாசம் 98ல், வல்லவன் படத்தில் இடம்பெற்ற எம்மாடி ஆத்தாடி, மங்காத்தாவில் இடம்பெற்ற வாடா பின்லேடா உள்ளிட்ட பல பாடல்களை பாடிய சுசித்ரா கடந்த 2016ஆம் ஆண்டு தலைப்பு செய்தியாக மாறினார். அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்து: அவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதற்கு பிறகு சுசித்ராவை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துகொண்டு இப்போது இன்னொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார் சுசித்ரா.
சுசித்ராவின் பேட்டி: கிட்டத்தட்ட 8 வருடங்கள்வரை எங்கிருந்தார் என்று தெரியாத சுசித்ரா இப்போது மீண்டும் பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் சுச்சி லீக்ஸ் என்பதே தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் செய்த பிராங்க்தான். முக்கியமாக அந்தப் புகைப்படங்களை திரிஷாதான் வெளியிட்டார் என்று சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.
திரிஷாவின் பதிலடி: மேலும் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறையில் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷா, “நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்து பேசுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் மற்றொரு யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா அளித்த பேட்டியில் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இரண்டாவது: இந்நிலையில் அதே பேட்டியில் தனது இரண்டாவது கணவர் குறித்தும் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், “எனது இரண்டாவது கணவர் போல் ஒருவர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவரது பெயர் ராஜா. அவர் ஒரு வழக்கறிஞர். நான் மென்பொருள் துறையில் பயின்றபோது போர்ட் ஹவுசில் ரோவிங் பயிற்சிக்காக சென்றேன். அப்போதுதான் அவர் எனது பழக்கமானார். முதலில் ஃபார்மலாகத்தான் நாங்கள் பழகிக்கொண்டோம்.
எனக்காக ஆஜரானார்: அந்த சமயத்தில்தான் எனது அக்கா எனது சொத்தை அபகரிக்க நினைத்தபோது எனக்காக வழக்கறிஞராக ஆஜரானார் ராஜா. அப்போதிருந்து இரண்டு பேருமே நெருக்கமாக பழக ஆரம்பித்தோம். அவரும் ஏற்கனவே விவாகரத்தானவர். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான், அவர், இரண்டு குழந்தைகள், அவரது அம்மா என ஐந்து பேரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றார்.


Click it and Unblock the Notifications











