தனுஷ் பாலியல் வன்கொடுமை செய்யல.. திரிஷா இருந்தார்.. கார்த்திக் செஞ்சிருக்கலாம்.. சுசித்ரா பகீர்
சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா யூட்யூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அந்தப் பேட்டிகளில் பல விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்திவருகிறார். அவர் மீது நடிகை ரீமா கல்லிங்கல் கொச்சி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார். இப்போது மும்பையில் இருக்கும் சுசித்ரா சென்னைக்கு வருவதில்லை என்று தெரிகிறது. இந்தச் சூழலில் ஆகாயம் என்ற யூட்யூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பாடகி, பத்திரிகையாளர், நடிகை என்று பன்முகதிறமை கொண்டவர் சுசித்ரா. அவர் பாடிய ஏராளமான பாடல்கள் ஹிட்டடித்திருக்கின்றன. அவருக்கும், யாரடி நீ மோகினி படத்தில் நடித்த கார்த்திக் குமாருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் இருவரும் பிரிந்துவிட்டனர். கார்த்திக்கை பிரிந்த சுசித்ரா தனது தோழர் ஒருவரையே காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கார்த்திக்கும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே சுச்சி லீக்ஸுக்கு காரணமே கார்த்திக் குமார், தனுஷ் உள்ளிட்டோர்தான் என்று சுசித்ரா தொடர்ந்து கூறிவருகிறார்.

சுசித்ரா பேட்டி: இந்நிலையில் ஆகாயம் யூட்யூப் சேனலுக்கு சுசித்ரா அளித்த பேட்டியில், "எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் வெளியிட்ட ஒரு வீடியோவுக்கு பிறகு ஒட்டுமொத்த தமிழ்நாடும் என்னை பைத்தியம் என்றுதான் சொல்லியது. அதுமட்டுமின்றி போதைக்கு அடிமையாகிவிட்டேன் என்றும் சொல்லியது. ஆனால் அதற்கெல்லாம் கார்த்திக் குமார்தான் காரணம். நான் நார்மலாகத்தான் இருக்கிறேன் என்று யாருமே நினைக்கவில்லை.
பாடுவேன்: இப்போது எனக்கு பாடுவதில் ஆர்வம் இருக்கிறது. என்னை அழைத்தால் நான் கண்டிப்பாக பாடுவேன். ஆனால் 40 வயதுக்கு மேல் மேடையில் பாடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இருந்தாலும் நான் ரெக்கார்டிங் சென்று பாடிக்கொண்டுதான் இருக்கிறேன். சமீபத்தில்கூட நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். சுச்சி லீக்ஸை நான் செய்யவே இல்லை. அதனை செய்தது கார்த்திக் குமார்தான்.
தனுஷ் ரேப் செய்யவில்லை: சுச்சி லீக்ஸ் சமயத்தில் தனுஷ் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்று வந்ததுகூட முழுக்க முழுக்க தவறான செய்திதான். நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். அதை பிரிக்கலாம் என்றுதான் கார்த்திக் குமார் எக்ஸ்ட்ரீமுக்கு சென்று அதை பரப்பியிருக்கலாம். அப்படி செய்திருக்கலாம். ஸ்க்ரீனில்தான் கார்த்திக் சுமாரான நடிகன். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவரை மாதிரி ஒரு நல்ல நடிகரை எங்கேயும் பார்க்கவே முடியாது என்பதுதான் உண்மை.
தனுஷுக்கு ஆதரவு: ஒருகட்டத்தில் கார்த்திக் குமாருக்கும் தனுஷுக்கு இடையே பிரச்னை வந்தது. அந்தச் சமயத்தில் மொத்த திரையுலகினரும் தனுஷுக்குத்தான் ஆதரவாக இருந்தார்கள். எனது அப்பாவோ, அம்மாவோ சினிமா தொழிலை சேர்ந்தவர்கள் கிடையாது. என்னை பாதுகாப்பதற்கென்று சினிமாவில் யாருமே கிடையாது. என்னை பற்றி வெளியே தவறான பிம்பத்தை உருவாக்கியது கார்த்திக் குமாரும் தனுஷும்தான். அதில் வருண் மணியன் இருந்தார். ஏன் திரிஷாவும் இருந்தார். என்னை பிச்சை எடுக்க வைக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.முக்கியமாக எனது குடும்பம் கல்வியால் வளர்ச்சியடைந்த குடும்பம்" என்றார்.


Click it and Unblock the Notifications











