நீங்க ஜொள்ளு விடும் ஜாமியா.. இல்லை சம்பவம் செய்யும் மகாமுனியா? ஹாப்பி பர்த்டே ஆர்யா!

சென்னை: நடிகர் ஆர்யாவின் 39வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமான நடிகர் ஆர்யா, இந்த ஆண்டு வெளியான மகாமுனி வரை பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் அஜித், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் செகண்ட் ஹீரோ சப்ஜெக்டிலும் நடிகர் ஆர்யா தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜாமி

ஜாமி

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள திரிகாரிப்பூர் எனும் ஊரில், 1980ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி ஆர்யா பிறந்தார். ஆர்யாவின் இயற்பெயர் ஜம்ஷத் சேத்திரகத். ஜம்ஷத் எனும் பெயரை தான் ஜாமி என சுருக்கி செல்லமாக அழைத்து வருகின்றனர்.

முதல் படம்

முதல் படம்

அசிஸ்டன்ட் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த ஆர்யாவை, ஒளிப்பதிவாளர் ஜீவா, தான் இயக்கவுள்ள உள்ளம் கேட்குமே படத்தில் நடிக்க வைக்க 2003ம் ஆண்டு திரைத்துறைக்கு கொண்டு வந்தார். ஆனால், அந்த படம் வெளியாவதற்கு முன்னதாக, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான அறிந்தும் அறியாமலும் படம் 2005ம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டில் உள்ளம் கேட்குமே படமும் ரிலீசாகி ஆர்யாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

ஜொள்ளு பாய்

ஜொள்ளு பாய்

தமிழ் சினிமாவில் ஜொள்ளு பாய்க்கான கதையை ரெடி செய்யும் இயக்குநர்கள், கூடவே ஆர்யாவின் கால்ஷீட்டை தவறாமல் வாங்கிவிடுவார்கள். அட்லியின் ராஜா ராணி படத்தில் இதனை 100 சதவீதம் நிரூபித்திருப்பார் நடிகர் ஆர்யா.

மகாமுனி

மகாமுனி

ஜொள்ளு பாயாக மட்டுமே ஆர்யா நடிப்பார் என்று சொல்லி விட முடியாது. பாலாவின் நான் கடவுள் படத்தில் ஆர்யா நடித்த அகோரி கதாபாத்திரம் ஆர்யாவின் நடிப்புத் திறமை குறித்து தமிழ் சினிமா அறிந்து கொள்ள உதவியது. இந்த ஆண்டு வெளியான மகாமுனி படத்திலும் ஆர்யா இரு வேடங்களில் மிரட்டலாக நடித்திருந்தார்.

டெடி

ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் டெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியானது. மிருதன், டிக் டிக் டிக் என ஹாலிவுட் ஸ்டைலில் படங்களை இயக்கி வரும் சக்தி செளந்தரராஜன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆர்யா – சாயிஷா

வனமகன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சாயிஷா, ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ஆர்யாவுக்கும் அவருக்கும் இடையே மலர்ந்த காதல் திருமணமாக மாறியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X