ரசிகர்களை தெருத்தெருவாக ஓட வைத்த சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன தெரியுமா?

Recommended Video

Hero : ரசிகர்களை தெருத்தெருவாக ஓட வைத்த சிவகார்த்திகேயன்

சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியை வேற லெவலில் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தொடங்கியுள்ளது. நேற்று மாலை Play Hero எனும் Augmented reality game ஒன்றை கூகுள் பிளே ஸ்டோரில் ஹீரோ படக்குழு வெளியிட்டுள்ளது.

உலகளவில் டிரெண்டான போக்கிமான் கோ விளையாட்டை போல, ஹீரோ சிம்பளை தேடி தேடி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது தெருத்தெருவாக ஓடி வருகின்றனர்.

ஹீரோ

ஹீரோ

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹீரோ. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார்.

வேற லெவல் விளம்பரம்

பொதுவாக மாஸ் நடிகர்கள் படங்களுக்கு எந்தளவுக்கு விளம்பரங்கள் செய்யப்படுமோ அதே அளவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் படங்களுக்கும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதம் வெளியாகவுள்ள ஹீரோ படத்திற்கு பிளே ஹீரோ கேம் வெளியிட்டு வேற லெவல் விளம்பரம் செய்துள்ளனர்.

ஏ.ஆர். என்றால் என்ன?

ஏ.ஆர். என்றால் என்ன?

வீடியோ கேமில் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ கேம் என்றால், மாய உலகில் நாம் சென்று விளையாடுவது. ஆக்மென்டட் ரியாலிட்டி என்பது, நிஜ உலகில் மாய உலகை வரவழைப்பது. ஏ.ஆர். கேமில் உலக அளவு தாக்கத்தை ஏற்படுத்திய போக்கிமான் கோ விளையாட்டு இளைஞர்களை பெரிதும் பாதிப்பதாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பாக விளையாடுங்க

பிளே ஹீரோ கேமை அறிமுகப்படுத்தியுள்ள சிவகார்த்திகேயன், இந்த கேமை பாதுகாப்பாக விளையாடுங்க என அறிவுறுத்தியுள்ளார். ஏனென்றால், ஹீரோ சிம்பளை தேடி ஓடும் நபர்களுக்கு, விபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஜாலியாக விளையாடுங்கள் என அட்வைஸ் செய்துள்ளார்.

கஷ்டமா இருந்தாலும்

பிளே ஹீரோ கேம் கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்குல என மாரி 2 பட மீம் போட்டு இந்த ரசிகர் தனது கேம் விளையாடிய அனுபவத்தை கூறியுள்ளார்.

ரசிகர்கள் சந்தித்துக் கொள்ளும்போது

பிளே ஹீரோ விளையாடும் இரண்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்தித்துக் கொள்ளும் போது இப்படித்தான் இருக்கும் என சூர்யவம்சம் காட்சியை மீமாக போட்டு இந்த ரசிகர் கலாய்த்துள்ளார்.

தெரு தெருவா

நாங்க மொபைல் எடுத்துட்டு தெரு தெருவா போறதுக்கு யார் காரணம் எல்லாம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தான் என பிளே ஹீரோ கேம் விளையாடும் மற்றொரு சிவகார்த்திகேயன் ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: hero ஹீரோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X