அன்பு மகனே.. எங்கள விட்டு போய்ட்டீயே.. அந்தோணிதாசன் உருக்கம்!

சென்னை: இன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பின்னணிப் பாடகராக இருக்கிறார் அந்தோணிதாசன். உலகத்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சென்று தமிழினின் பெருமை நிலைநிறுத்தி வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் என்ற கிராமில் பிறந்த அந்தோணிதாசன், நாட்டுப்புற இசை பாடகர், தெருக்கூத்து பாடகர் ஆவார். தனியிசைக் கலைஞராகவும் நடிகராகவும் தனது இசைக் குழுவை வழி நடத்தி வரும் இவர், 2013 ஆம் ஆண்டு சந்தோஷ்நாராயணன் இசையில் சூதுகவ்வும் படத்தில் ' காசு, பணம்,துட்டு,மணி' என்ற பாடலை பாடினார். முதல் பாடலே மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தார்.

Anthony Dasan instagram
Photo Credit:

ஆண்டனிதாசன்: அந்த படத்தை தொடர்ந்து ஆண்டனிதாசன் அடுத்தடுத்த பல வெற்றிப்பாடல்களை பாடி உள்ளார். வான் அளவு உயர்ந்து இருக்கும் இவரது பாடல்கள் இல்லாமல் பொங்கல் பண்டிகை இல்லை என்கிற நிலையை உருவாகி உள்ளது. கிராமத்து பண்டிகை திருவிழா நிகழ்ச்சி என்றால் எட்டுதிக்கும் இவரது பாட்டுத்தான். இவர் நாட்டுப்புறக் கலைஞரான ரீட்டாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

உருக்கமான போஸ்ட்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்டணிதாசன் தனது இன்ஸ்டாகிராமில், தன்னுடன் பணித்த கரன் என்பவர் உயிரிழந்ததை போட்டோவுடன் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அன்பு மகனே.. எங்கள் விட்டு போய்ட்டீயேடா உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X