கோமா நிலையில் இருந்த பாம்பே ஜெயஸ்ரீ எப்படி இருக்கிறார்.. வெளியான தகவல்!
லண்டன் : லண்டன் : மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
58 வயதான பாம்பே ஜெய ஸ்ரீ, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார்.
இளையராஜா,ஏர்.ஆர் ரஹ்மான்,ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் இவரது குரல் மாயாஜாலம் செய்திருக்கும்.

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ
மெல்லியக்குரலுக்கு சொந்தக்காரியான பாம்பே ஜெயஸ்ரீயின் குரலுக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம். பாரதியாரின் பாடல்களான '' பாயும் ஒளி நீ எனக்கு '' பாடலும் ''மாலை பொழுதின் '' பாடலையும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் நாளேல்லாம் கேட்டு பூரிந்து போனவர்கள் கொடான கோடி மக்கள். இவர் சினிமாவில், பொல்லாதவன் படத்தில் மின்னல்கள் கூத்தாலும் மழைக்காலம், மின்னலே படத்தில் வசீகரா என பாடி பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

சுயநினைவை இழந்தார்
இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்ற ஜெயஸ்ரீக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் லிவர்பூல் நகர் ஹோட்டலில் தங்கி இருந்த அவர், நீண்ட நேரமாகியும் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்தவர், அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது, பாம்பே ஜெயஸ்ரீ மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்தது
இதையடுத்து, அவரை மீட்ட ஹோட்டல் ஊழியர்கள், அவரை லிவர்பூலில் உள்ள சிறப்பு NHS வால்டன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்ததால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அதையடுத்து, மருத்துவமனை அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடித்தாகவும், அவர் தற்போது 48 மணிநேரம் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

பாம்பே ஜெயஸ்ரீ எப்படி இருக்கிறார்?
இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீயின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், பாம்பே ஜெயஸ்ரீக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஜெயஸ்ரீ உடல்நிலையில் முன்னேற்ற ஏற்பட்டு வருகிறது. என்.ஹெச்.எஸ் ஊழியர்கள் அவரை சிறப்பாக கவனித்து வருகிறார்கள்.இந்திய அரசும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











