ரொம்ப மோசம்.. முடியல.. ராதா ரவியின் ஆபாச பேச்சால் கடுப்பான சின்மயி.. செம கிழி!

சென்னை: ராதா ரவியின் ஆபாச பேச்சுக்கு பிரபல பாடகியான சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Radha Ravi-யின் ஆபாச ஜோக்..அத்துமீறல் பேச்சு | Oneindia Tamil

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

எப்படியாது வாக்குகளை வாங்க வேண்டும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்க வேண்டும் என்று சில அரசியல் பிரமுகர்கள் எல்லை மீறி பேசி வருகின்றனர்.

நயன்தாரா குறித்து

நயன்தாரா குறித்து

அந்த வகையில் நடிகர் ராதா ரவியின் பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தங்களின் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேச வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை விமர்சித்த ராதா ரவி, நடிகை நயன்தாராவையும் உதயநிதி ஸ்டாலினையும் இணைத்து பேசினார்.

என்ன உறவு?

என்ன உறவு?

நயன்தாரா என்ன திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரா? அவருக்கும் உதயநிதிக்கும் என்ன உறவு? அவர்களுக்கு இடையில் உள்ள உறவை அறிந்து கொள்ள திமுகவினர் ஆர்வமாக உள்ளனர் என கண்டப்படி பேசினார்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

ஏற்கனவே நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராதா ரவி, மீண்டும் அதே அஸ்திரத்தை கையில் எடுத்து அந்த கட்சியை விமர்சித்து வருகிறார். நயன்தாரா மற்றும் உதயநிதி குறித்து ராதா ரவி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

டையர்டு ஆகிட்டேன்

டையர்டு ஆகிட்டேன்

இந்நிலையில் ராதா ரவி பேசிய வீடியோ பார்த்த பிரபல பாடகியான சின்மயி, அவரை விளாசி தள்ளியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்த மனிதராலும் இவர் பேசு பேச்சாலும் நான் உண்மையிலேயே ரொம்ப டையர்டு ஆகிவிட்டேன். என்னால் முடியவில்லை.

மோசமானவர்கள்

மோசமானவர்கள்

இந்த மனிதர் வெளிப்படையாகவே ஆபாசமாக பேசுகிறார். துன்புறுத்துகிறார். இவரை நட்சத்திர பேச்சாளராக ஏன் கட்சி எடுத்தது. திமுகவின் ஆ ராசாவாக இருக்கட்டும் அல்லது ராதா ரவியாக இருக்கட்டும், இவர்கள் எல்லோரும் மோசமானவர்கள்தான். இவர்களுக்கு தான் நாம் வாக்களித்து அதிகாரத்தை கொடுத்துள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

ராதா ரவியுடன் மோதல்

ராதா ரவியுடன் மோதல்

பாடகி சின்மயிக்கும் ராதா ரவிக்கும் ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது. டப்பிங் சங்க தேர்தலில் ராதா ரவியை எதிர்த்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார் சின்மயி. ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதால் மீண்டும் டப்பிங் சங்க தலைவரான ராதா ரவி.

சின்மயி குற்றச்சாட்டுக்கள்

பின்னர் சங்கத்துக்கான சந்தாவை செலுத்தவில்லை என சின்மயியை கடந்த 2018ஆம் ஆண்டு சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது ராதா ரவியின் டத்தோ பட்டம் பொய் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சின்மயி முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X