தாமரை மலர்ந்தா என்ன.. மலராட்டா எனக்கென்ன.. வைரமுத்துவால் கடுப்பான பிரபலம்!

சென்னை: வைரமுத்துவால் கடுப்பான நடிகை சின்மயி கடுப்பாகி நெட்டிசன்கள் மீது பாய்ந்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளார்.

பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி, வைரமுத்து மீது கடந்த ஆண்டு மீடூவில் பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வைரமுத்துவை கடுமையாக விமர்சித்தார்.

கடுமையான வார்த்தை

கடுமையான வார்த்தை

ஆனால் டிவிட்டரில் சின்மயிக்கு ஆதரவாக சிலர் பேசினாலும் பெரும்பாலனோர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். வைரமுத்துவுக்காக சின்மயியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.

நக்கலாக டிவிட்டிய நெட்டிசன்

இதனால் கடுப்பான சின்மயி, தன்னைப் பற்றி தவறாக பேசும் நெட்டிசன்களுக்கு பொட்டில் அடித்தாற்போல் பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் அக்கா இவா பண்ற அநியாயத்த பாத்தேளா என வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த டிவிட்டை நக்கலாக டேக் செய்திருந்தார்.

என்னை பொய்யர்

என்னை பொய்யர்

அவரது டிவிட்டை பார்த்த பாடகி சின்மயி பிரச்சனையே வைரமுத்துவுக்கு நிறைய தமிழர்கள் சப்போர்ட் இருப்பதுதான் என தெரிவித்துள்ளார். ஜாதி அடையாளத்தால் அவர் பாலியல் தொல்லை கொடுத்தப்போதும் என்னை பொய்யர் என்று கூறுகிறார்கள்.

சாதி அடையாளம்

தொடர்ந்து களங்கப்படுத்துகிறார்கள், தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள்.ஒரு சாதி அடையாளத்தின் காரணமாக ஒரு பாலியல் வன்கொடுமைக்கு ஆதரவளிக்கும் தர்க்கம் வியக்க வைக்கிறது. என பதிவிட்டிருந்தார்.

மலரவே மலராது..

சின்மியியின் இந்த டிவிட்டை பார்த்த மற்றொரு நெட்டிசன், யக்கோவ்! உங்க இங்கிலிஸ் பீட்டர்லாம் பீட்டா, மீ டு க்கிட்ட வச்சிக்கோங்க.. தமிழ்நாட்டுல வேண்டாம். தாமரை மலரவே மலராது என பதிவிட்டிருந்தார்.

மலர்ந்தா என்ன?

இந்த டிவிட்டை பார்த்து கடுப்பான சின்மயி, தாமரை மலர்ந்தா என்ன மலராட்டா எனக்கென்ன? நீங்க மட்டும் தவறாம ரேப் பண்ணவன் கற்பழிச்சவனுக்கெல்லாம் துணையா நிப்பீங்கன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க. ஆனா தாமரை சம்மந்தபட்டவங்க கிட்றுந்து விருது மட்டும் வாங்கிப்பீங்க.. உங்க நியாயம் இருக்கே. செம்ம! என பதிலடி கொடுத்துள்ளார்.

அப்படி தோனுது

அதற்கும் பதில் தெரிவித்த நெட்டிசன், ரேப் பண்ணவன் கற்பழிச்சவன்...ரெண்டும் ஒன்னுதான். ஆனா நீங்க ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிங்கனு மட்டும் தெரியுது. அந்த பாதிப்புக்கு கவிஞர் மட்டும் காரணமில்லை.. இன்னும் நிறைய பேர் இருப்பாங்களோனு தோனுது.. என பதிவிட்டார்.

ஏன் தோனாது?

அதற்கெல்லாம் அசராத சின்மயி, தோனும், ஏன் தோனாது? உன்னை போல ஆண்களை மட்டுமே உன் குடும்பத்தினர் சந்திக்க வேண்டும் என வேண்டுகிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

தேவதாசி வேணுமாம்

இப்படியாக நெட்டிசன்கள் பேச.. பதிலுக்கு சின்மயியும் பேச வேறு மாதிரியாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே நெட்டிசன் ஒருவர், திருச்சி ரெங்கநாதர் கோவிலுக்கு தேவதாசி வேணுமாம். ப்ளீஸ் போங்கோ என சின்மயின் டிவிட்டர் கணக்கை டேக் செய்து டிவிட்டியிருக்கிறார்.

எப்படி பேசுகிறார்கள்

அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சின்மயி, திருச்சி கோவிலுக்கு தேவதாசி வேணுமாம்.. ப்ளீஸ் போங்க.. தமிழ்நாட்டில் ஒரு பாலியல் வன்கொடுமைக்கு ஆதரவாளர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று ஈமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X